நீங்க 2 பேரும் போட்டது போதும்.. பவுலிங்கை மாற்றி விக்கெட்டை பறித்த கேப்டன் ரோஹித்!! ரிவியூனா இப்படி கேட்கணும்

By karthikeyan VFirst Published Sep 23, 2018, 6:05 PM IST
Highlights

தொடக்கம் முதலே ரன் எடுக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி, 8வது ஓவரில் இமாமின் விக்கெட்டையும் 15வது ஓவரில் ஃபகார் ஜமானின் விக்கெட்டையும் இழந்தது.  
 

தொடக்கம் முதலே ரன் எடுக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி, 8வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. 

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான துபாயில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபகார் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே தொடக்கம் முதலே ரன் எடுக்க முடியாமல் திணறினர். புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் அருமையாக பந்துவீசி நெருக்கடி கொடுத்தனர். இமாமும் ஜமானும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் ரன் எடுக்க முடியாமல் திணறினாலும் விக்கெட்டை விட்டுக்கொடுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். அதை அவர்களின் ஆட்டத்தின் மூலமே அறியமுடிந்தது. 

முதல் 7 ஓவர்கள் முடிவில் 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். அந்த நேரத்தில் 8வது ஓவரை வீச வேண்டிய பும்ராவை நிறுத்திவிட்டு ஸ்பின் பவுலர் சாஹலை அழைத்தார் கேப்டன் ரோஹித். ரோஹித்தின் வியூகத்திற்கு பலன் கிடைத்தது. 

சாஹல் வீசிய 8வது ஓவரின் கடைசி பந்து இமாமின் கால்காப்பில் பட்டது. இந்திய வீரர்கள் அம்பயரிடம் அப்பீல் செய்தனர். ஆனால் அம்பயர் அவுட் தர மறுக்க, தோனியின் அனுமதியுடன் ரிவியூ கேட்கப்பட்டது. ரிவியூவில் இமாம் அவுட்டானது உறுதியானது. சாஹல் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார். 

புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவின் பவுலிங்கில் ரன் எடுக்க பாகிஸ்தான் வீரர்கள் திணறினாலும் விக்கெட்டை இழந்துவிடாமல் புவனேஷ் மற்றும் பும்ராவின் பந்துகளை எதிர்கொண்டு ஆடினர். இந்திய அணிக்கு தேவை விக்கெட். எனவே உடனடியாக சாஹலை களமிறக்கினார் கேப்டன் ரோஹித். ரோஹித்தின் நம்பிக்கையை வீணடிக்காமல் விக்கெட்டையும் வீழ்த்தினார் சாஹல். இதுதான் ஒரு சிறந்த கேப்டன்சிக்கு எடுத்துக்காட்டு. அதேபோல் ரிவியூ கேட்பதிலும் தோனி மற்றும் சாஹலை கலந்தாலோசிவிட்டு உறுதியுடன் ரோஹித் ரிவியூ கேட்டரே தவிர, சந்தேகத்துடன் அவசரப்பட்டு தன்னிச்சையாக ரிவியூ கேட்கவில்லை. 

இதையடுத்து ஃபகார் ஜமானுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். ஃபகார் ஜமான் அதிரடியாக ஆட தொடங்கினார். சிக்ஸர், பவுண்டரி என விளாச தொடங்கிய சில நிமிடங்களில் குல்தீப்பின் பவுலிங்கில் எல்பிடபிள்யூ ஆகி 31 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து பாபர் அசாமுடன் ஷோயப் மாலிக் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 15 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது பாகிஸ்தான் அணி.
 

click me!