அவரு நல்லாத்தான் போடுறாரு.. அது நல்ல விஷயம்தான்!!ஆனால்... இக்கு வைத்த ரோஹித் சர்மா

Published : Nov 09, 2018, 12:52 PM IST
அவரு நல்லாத்தான் போடுறாரு.. அது நல்ல விஷயம்தான்!!ஆனால்... இக்கு வைத்த ரோஹித் சர்மா

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் முழுக்க முழுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 எனவும் ஒருநாள் தொடரை 3-1 எனவும் இந்திய அணி வென்றது.   

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் முழுக்க முழுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 எனவும் ஒருநாள் தொடரை 3-1 எனவும் இந்திய அணி வென்றது. 

இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலிரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டிலுமே வென்ற இந்திய அணி டி20 தொடரை வென்றுவிட்டது. மூன்றாவது போட்டி வரும் 11ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்தியாவிற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி மண்ணை கவ்வினாலும் அந்த அணி பல சிறந்த இளம் திறமைகளை இந்த தொடரின் மூலமாக அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஒஷேன் தாமஸ் முக்கியமானவர். 

இவர் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசினார். இந்திய அணிக்கு எதிராக ஆடிய நான்கு போட்டிகளில் மூன்று முறை தவானை வீழ்த்தினார். அதுவும் அந்த மூன்றுமே கிளீன் போல்டு. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உயரம் மிகப்பெரிய பலமாக அமையும். அந்த வகையில் தாமஸ் நல்ல உயரமாக இருப்பதும் அவருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. 

இந்நிலையில், ஒஷேன் தாமஸ் குறித்து கருத்து தெரிவித்த ரோஹித் சர்மா, தாமஸ் சிறந்த திறமை கொண்டவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் உயரமாக இருப்பதாலும் உயரமாக தாவியும் பந்துவீசுவதால் சரியான இடத்தில் பந்து வீசினால் அவரது பவுலிங்கை உலகின் எந்த பேட்ஸ்மேனும் எதிர்கொள்வது கடினம்தான். அவரது திறமையுடன், அவரது உயரமும் சேர்ந்து அவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அவருக்கு சிறந்த எதிர்காலம் அமைய நான் வாழ்த்துகிறேன். ஆனால் அது இந்தியாவிற்கு எதிராக அல்ல என நகைச்சுவை உணர்வோடு கூறி சிரித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து