நாட்டின் உயரிய கேல் ரத்னா விருதை வென்ற ரோஹித் சர்மா, தமிழன் மாரியப்பன் தங்கவேலு

By karthikeyan VFirst Published Aug 21, 2020, 6:03 PM IST
Highlights

விளையாட்டு வீரர்களுக்கான நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருது, ரோஹித் சர்மா மற்றும் தமிழக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு உட்பட 5 பேருக்கு வழங்கப்பட்டது. 
 

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. விளையாட்டில் சாதிப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கேல் ரத்னா, அர்ஜூனா ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன.

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான நாட்டின் உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மற்றும் ஹாக்கி வீராங்கனை ராணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா உள்ளிட்ட 27 பேருக்கு அர்ஜூனா விருதும் வாழ்நாள் சாதனையாளருக்கான துரோணாச்சாரியார் விருது 8 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அர்ஜூனா விருது வென்ற விளையாட்டு வீரர்கள்:

 

click me!