ஏமாற்றினாரா ஹிட்மேன்..? சர்ச்சையில் சிக்கிய ரோஹித் சர்மா.. வீடியோ

By karthikeyan VFirst Published Oct 20, 2018, 11:16 AM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா பிடித்த கேட்ச் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 
 

விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா பிடித்த கேட்ச் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டி பெங்களூருவில் நடந்துவருகிறது. இறுதி போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்ததால் டெல்லி அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்த தொடரில் பீகாருக்கு எதிரான காலிறுதி போட்டி மற்றும் ஹைதராபாத்துக்கு எதிரான அரையிறுதி போட்டி ஆகியவற்றில் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா ஆடினார். நாளை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக ஆட வேண்டியிருப்பதால் இன்று நடந்துவரும் இறுதி போட்டியில் ரோஹித் சர்மா ஆடவில்லை. 

இந்நிலையில், ஹைதராபாத்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சந்தீப்பிற்கு ரோஹித் சர்மா பிடித்த கேட்ச் குறித்து ரசிகர்கள் பலவிதமான கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் விஜேடி முறையில் மும்பை அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் வீரர் சந்தீப்பின் கேட்ச்சை முதல் ஸ்லிப்பில் நின்ற ரோஹித் சர்மா பிடித்தார். தரையை ஒட்டி வந்த பந்தை கேட்ச் செய்துவிட்டு ரோஹித் சர்மா கொண்டாடினார். பந்து தரையை ஒட்டி வந்ததால் அது விக்கெட்டா என்பதை உறுதியாக அறியமுடியாததால் கள நடுவர்கள், மூன்றாவது அம்பயரின் முடிவிற்கு விட்டனர். வீடியோவை ஆராய்ந்த மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார். எனினும் அந்த பந்து தரையை ஒட்டி வந்ததால் அவுட்டா இல்லையா என்பதை முடிவெடுக்க மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் அதை ஆராய்ந்த மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார். 

pic.twitter.com/17yjoQtdeS

— Mushfiqur Fan (@NaaginDance)

எனினும் தரையில் பட்டபிறகே அந்த பந்தை ரோஹித் சர்மா பிடித்தார். ஆனால் உண்மையை ஒப்புக்கொள்ளாமல் கேட்ச் பிடித்துவிட்டதாக ஏமாற்றிவிட்டார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஆனால் ரோஹித் சர்மாவின் விரல்கள் பந்திற்கு அடியில்தான் இருந்தது; அவர் முறையாகத்தான் கேட்ச் செய்தார் என்று ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். 
 

click me!