
20 ஓவர் கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். இதன்மூலம் ரோஹித் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
20 ஓவர் கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக், சையத் முஸ்தாக் அலி டிராபி உள்ளிட்ட பல வகையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 301 சிக்ஸர்களை விளாசியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் ரோஹித் தான்.
சர்வதேச டி20 போட்டிகளில் 78 சிக்ஸர்களும் ஐபிஎல் போட்டிகளில் 183 சிக்ஸர்களும் ரோஹித் அடித்துள்ளார். எஞ்சிய 40 சிக்ஸர்கள் மற்ற தொடர்களில் அடிக்கப்பட்டவை.
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியல்:
1. கிறிஸ் கெய்ல் - 844 சிக்ஸர்கள்
2. பொல்லார்டு - 525 சிக்ஸர்கள்
3. பிரண்டன் மெக்கல்லம் - 445 சிக்ஸர்கள்
4. டிவைன் ஸ்மித் - 367 சிக்ஸர்கள்
5. ஷேன் வாட்சன் - 357 சிக்ஸர்கள்
6. டேவிட் வார்னர் - 319 சிக்ஸர்கள்
7. ரோஹித் சர்மா - 301 சிக்ஸர்கள்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.