
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 11வது சீசனின் 35வது லீக் போட்டி புனே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி பெங்களூரு அணிக்கு முக்கியமான போட்டி. இதுவரை 9 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி, 6 வெற்றிகளை பதிவு செய்து 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆனால், 8 போட்டிகளில் ஆடியுள்ள பெங்களூரு அணி, 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 6 போட்டிகளில்(இந்த போட்டியும் சேர்த்து) 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு அணி உள்ளது. ஆனால் சென்னை அணிக்கு எஞ்சியுள்ள 5 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றாலே பிளே ஆஃபிற்கு சென்னை தகுதி பெற்றுவிடும்.
எனினும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க சென்னை அணி முயலும். இரு அணிகளும் வெற்றி முனைப்பில் களம் காண்கின்றன.
சென்னை அணியில் டுபிளெசிஸிற்கு பதிலாக டேவிட் வில்லே சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிஃபிற்கு பதிலாக ஷர்துல் தாகூரும் கரண் சர்மாவிற்கு பதிலாக துருவ் ஷோராயும் களமிறங்குகின்றனர். டுபிளெசிஸ் இல்லாததால் வாட்சனும் ராயுடுவும் தொடக்க வீரர்களாக களமிறங்குகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.