பவுலரோட திறமைதான் காரணம்.. ஆனாலும் இதெல்லாம் நியூசிலாந்தின் அதிர்ஷ்டம் தான்!!

By karthikeyan VFirst Published Jan 26, 2019, 10:14 AM IST
Highlights

ஷார்ட் பிட்ச் பந்துகளை புல் ஷாட் ஆடுவதில் ரோஹித் வல்லவர். அந்த வகையில் ஃபெர்குசன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆடினார். அதை டீப் ஸ்கொயர் லெக்கில் கிராண்ட்ஹோம் அருமையாக கேட்ச் செய்து ரோஹித்தை வெளியேற்றினார். 
 

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா, 87 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 154 ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் கடந்து அருமையாக ஆடிவந்த நிலையில் தவானை 66 ரன்களில் டிரெண்ட் போல்ட் வெளியேற்றினார். 

80 ரன்களை கடந்து ஆடிவந்த ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். பொதுவாக களத்தில் நிலைத்து விட்டால் ரோஹித் சர்மா கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸை ஆடிவிடுவார். அவரை தொடக்கத்திலேயே வீழ்த்தினால்தான் உண்டு. இல்லையென்றால் பெரும்பாலும் அரைசதத்தை சதமாக மாற்றிவிடுவார். களத்தில் நிலைத்து சதமடித்துவிட்டால், அதன்பிறகு அவரது ருத்ரதாண்டவத்தை தடுப்பது கடினம். 

70 - 80 ரன்களில் பெரும்பாலும் அவுட்டாக மாட்டார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷார்ட் பிட்ச் பந்துகளை புல் ஷாட் ஆடுவதில் ரோஹித் வல்லவர். அந்த வகையில் ஃபெர்குசன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆடினார். அதை டீப் ஸ்கொயர் லெக்கில் கிராண்ட்ஹோம் அருமையாக கேட்ச் செய்து ரோஹித்தை வெளியேற்றினார். 

ரோஹித் அவுட்டானதற்கு முந்தைய பந்தை 151 கிமீ வேகத்தில் வீசிய ஃபெர்குசன், அடுத்த பந்தை 128 கிமீ வேகத்தில் ஸ்லோ டெலிவரியாக வீசினார். பந்தின் வேகத்தை பயன்படுத்தி அப்படியே சிக்ஸருக்கு விரட்ட நினைத்த ரோஹித், ஸ்லோ டெலிவரியில் சிக்கி அவுட்டானார். 

80 ரன்களுக்கு அடித்த ரோஹித் சர்மாவை, ஃபெர்குசன் தனது சமயோசித புத்தியால் அருமையாக பந்துவீசி அவுட் செய்திருந்தாலும், ரோஹித் சர்மா அவுட்டானது நியூசிலாந்து அணியின் அதிர்ஷ்டம் தான். இல்லையெனில் ரோஹித் சர்மா பெரிய இன்னிங்ஸை ஆடினால், இந்திய அணியின் ஸ்கோர் எங்கேயோ போயிருக்கும்.
 

click me!