ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித்துக்கு அரிய வாய்ப்பு!! பீதியில் கோலி

By karthikeyan VFirst Published Nov 13, 2018, 10:08 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மாவிற்காக சாதனைகள் காத்துக்கிடக்கின்றன. 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மாவிற்காக சாதனைகள் காத்துக்கிடக்கின்றன. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆஸ்திரேலியாவுடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆட உள்ளது. 

முதலில் டி20 தொடர் நடக்க உள்ளது. இந்த டி20 தொடரில் ரோஹித் சர்மாவுக்காக சாதனைகள் காத்துக்கிடக்கின்றன. பெரும்பாலும் டி20 தொடர்களில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுவதால் ரோஹித் சர்மாதான் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். 

டி20 போட்டிகளில் கேப்டனாகவும் வீரராகவும் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் அபாரமாக உள்ளன. வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றதன்மூலம் சாதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா. டி20 கேப்டனாக பல மைல்கற்களை ரோஹித் சர்மா எட்டியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அடித்த சதத்தின் மூலம் டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 4 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். மேலும் 2207 ரன்களுடன் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் மார்டின் கப்டிலுக்கு(2271 ரன்கள்) அடுத்த இரண்டாவது இடத்தில் இருக்கிறார் ரோஹித் சர்மா. 

மார்டின் கப்டிலை முந்த இன்னும் 65 ரன்கள் மட்டுமே தேவை. மேலும் 2018 காலண்டர் ஆண்டில் டி20 போட்டிகளில் 560 ரன்களை குவித்து, இந்த ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் ரோஹித் சர்மா உள்ளார். இந்த பட்டியலில் ஷிகர் தவான் 572 ரன்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஷிகர் தவானைவிட வெறும் 4 ரன்கள் அதிகமாக எடுத்துள்ள ஃபகார் ஜமான் முதலிடத்தில் உள்ளார். ஆனால் ஃபகார் ஜமானை பின்னுக்கு தள்ளிவிட்டு ரோஹித்தும் தவானும் முதலிரண்டு இடங்களை பிடித்துவிடுவர். 

ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மூன்று டி20 போட்டிகளில் ஆட உள்ளது. அதேநேரத்தில் இந்த ஆண்டில் இனிமேல் பாகிஸ்தானுக்கு டி20 தொடர் கிடையாது. நியூசிலாந்துடன் அண்மையில் ஆடிய டி20 தொடர்தான் இந்த ஆண்டின் கடைசி தொடர். 

எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித்தும் தவானும் இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த டாப் 2 வீரர்களாகிவிடுவர். இவர்களில் ரோஹித் சர்மா முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக உள்ளன. ஏனெனில் தவான் நன்றாக ஆடினாலும் ஒரு குறிப்பிட்ட ரன்களை மட்டும்தான் எடுப்பார். ஆனால் ரோஹித் சர்மா பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடியவர். எனவே அதிகமான ரன்களை குவிப்பதற்கான வாய்ப்புகள் ரோஹித்துக்கே உள்ளன. மேலும் தவானை விட தற்போதைக்கு வெறும் 12 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளார் ரோஹித். 

மேலும் ரோஹித் சர்மா 82 ரன்கள் எடுத்தால், ஒரு காலண்டர் ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற கோலியின் சாதனையை முறியடித்துவிடுவார். தவான் 70 ரன்களை குவித்தால் கோலியின் இந்த சாதனையை முறியடித்துவிடுவார். 2016ம் ஆண்டு கோலி 641 ரன்கள் குவித்ததே, இதுவரை ஒரு ஆண்டில் ஒரு வீரரால் டி20 போட்டியில் குவிக்கப்பட்ட அதிகமான ரன்களாகும். எனவே ரோஹித்தும் தவானும் கோலியின் இந்த சாதனையை முறியடித்துவிடுவர். 
 

click me!