4வது இரட்டை சதத்தை தவறவிட்ட ரோஹித்.. இமாலய ஸ்கோரை நோக்கி இந்தியா!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வெறித்தனமான பேட்டிங்

Published : Oct 29, 2018, 04:54 PM IST
4வது இரட்டை சதத்தை தவறவிட்ட ரோஹித்.. இமாலய ஸ்கோரை நோக்கி இந்தியா!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வெறித்தனமான பேட்டிங்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதற்கு பிறகு ரோஹித்தும் அடித்து ஆட, மறுமுனையில் ராயுடுவும் அடித்து ஆட, இந்திய அணி இமாலய ஸ்கோரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதற்கு பிறகு ரோஹித்தும் அடித்து ஆட, மறுமுனையில் ராயுடுவும் அடித்து ஆட, இந்திய அணி இமாலய ஸ்கோரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி இமாலய ஸ்கோரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தொடக்க வீரர் தவான் 39 ரன்களிலும் ரன் மெஷின் விராட் கோலி 16 ரன்களிலும் வெளியேறினர். 101 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. 

இதையடுத்து ரோஹித்துடன் ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமலும் அதேநேரத்தில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசி ரன்களையும் சேர்த்தது. நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா, 21வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். சதமடித்த பிறகு பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிவரும் ரோஹித், 7வது முறையாக 150 ரன்களை கடந்தார். 

ரோஹித் ஒருபுறம் அதிரடியாகா ஆட, ராயுடுவும் மறுமுனையில் இவரும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி சதத்தை நெருங்கிவிட்டார். 43 ஓவருக்கே 300 ரன்களை கடந்துவிட்டது இந்திய அணி. ரோஹித் 150 ரன்களை கடந்து அடித்து ஆடிய ரோஹித் சர்மா, நான்காவது முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 162 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தர். இதையடுத்து ராயுடுவுடன் தோனி ஜோடி சேர்ந்துள்ளார். இந்திய அணி 44 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்களை குவித்து, இமாலய ஸ்கோரை நோக்கி ஆடிவருகிறது. 

PREV
click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து