தவான் விக்கெட்டை அவரது பாணியிலேயே கொண்டாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்!! வீடியோ

Published : Oct 29, 2018, 03:43 PM IST
தவான் விக்கெட்டை அவரது பாணியிலேயே கொண்டாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்!! வீடியோ

சுருக்கம்

நான்காவது ஒருநாள் போட்டியில் தவானின் விக்கெட்டை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கீமோ பால், தவானை போலவே விக்கெட்டை கொண்டாடி வழியனுப்பிவைத்தார்.   

நான்காவது ஒருநாள் போட்டியில் தவானின் விக்கெட்டை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கீமோ பால், தவானை போலவே விக்கெட்டை கொண்டாடி வழியனுப்பிவைத்தார். 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக கேதர் ஜாதவும் சாஹலுக்கு பதிலாக ஜடேஜாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் சிறப்பாக தொடங்கினர். எனினும் அது நீடிக்கவில்லை. 40 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் தவான், கீமோ பாலின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து இந்திய அணியின் கேப்டனும் ரன் மெஷினுமான விராட் கோலி, 16 ரன்களில் ரோச்சின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோஹித்துடன் ராயுடு ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். நிதானமாக ஆடிவரும் ரோஹித் சர்மா, அரைசதம் கடந்து தொடர்ந்து ஆடிவருகிறார். 

தவானின் விக்கெட்டை வீழ்த்திய கீமோ பால், தவான் பாணியிலேயே அவரது விக்கெட்டை கொண்டாடி வழியனுப்பி வைத்தார். தவான் பொதுவாக கேட்ச் பிடித்துவிட்டால், தொடையை தட்டி கொண்டாடுவார். அதேபோல தவானின் விக்கெட்டை வீழ்த்தியதும் அவரைப்போலவே தொடையை தட்டி கொண்டாடினார் கீமோ பால். அதை பார்த்து தவான் சிரித்துக்கொண்டே வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

PREV
click me!

Recommended Stories

Vaibhav: பும்ராவையே மிரள வச்ச 15 வயசு பையன்! முதல் பந்திலேயே சிக்ஸர்... முன்னாள் வீரர் ஃபுல் மார்க்
Hardik Pandya Life: Mumbai Indians கேப்டன் ஹர்திக் பாண்டியா: 9-ஆம் வகுப்பு வரை படிப்பு..140 கோடி சொத்து;வியக்க வைக்கும் வாழ்க்கை!