வழக்கம்போல அவசரப்பட்ட ரோஹித் சர்மா!! நிதானமா ஹாங்காங்கை வச்சு செய்யும் தவான்

Published : Sep 18, 2018, 06:32 PM ISTUpdated : Sep 19, 2018, 09:29 AM IST
வழக்கம்போல அவசரப்பட்ட ரோஹித் சர்மா!! நிதானமா ஹாங்காங்கை வச்சு செய்யும் தவான்

சுருக்கம்

ஆசிய கோப்பை தொடரில் ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா வழக்கம்போலவே அவசரப்பட்டு தூக்கி அடித்து அவுட்டாகிவிட்டார். ஆனால் ஷிகர் தவான் தெளிவாக அடித்து ஆடிவருகிறார்.  

14வது ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஹாங்காங் இடையேயான போட்டி துபாயில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி, பவுலிங் தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் தவான் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர்.

முதலில் பேட்டிங் ஆடும் வாய்ப்பை பயன்படுத்தி, பெரிய இன்னிங்ஸை ஆடுவதை விடுத்து, அவசரப்பட்டு தூக்கியடித்து 23 ரன்களிலேயே அவுட்டாகிவிட்டார் ரோஹித் சர்மா. ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான், நிதானமாகவும் அதேநேரத்தில் அடிக்க வேண்டிய பந்துகளை தவறவிடாமல் அடித்தும் ஆடிவருகிறார். 

ஷிகர் தவானுடன் அம்பாதி ராயுடு ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி, 109 ரன்களை எடுத்து ஆடிவருகிறது. ஷிகர் தவான் அரைசதம் கடந்து ஆடிவருகிறார்.

PREV
click me!

Recommended Stories

Women's T20 World Cup: மகளிர் டி20 உலகக்கோப்பையில் பரிசு மழை.. அட! தோற்றாலும் இத்தனை கோடிகள் கிடைக்குமா?
Kane Williamson: இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த 'கேன் மாமா'.. சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன கேன் வில்லியம்சன்!