ஆஸ்திரேலியாவை ஜெயிக்க முதலில் இதை செய்ங்க! இந்திய அணிக்கு ஷாக் கொடுத்த சேட்டன் சவுகான்!

By sathish kFirst Published Sep 18, 2018, 5:17 PM IST
Highlights

இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு முன்பு தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி நீக்கப்படவேண்டும் என்று முன்னாள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சேட்டன் சவுகான் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 1969-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான சேட்டன் சவுகான், 1981-ஆம் ஆண்டு ஆக்லாந்தில் அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியுடனேயே ஓய்வு பெற்றார். இடைப்பட்ட 12 ஆண்டுகளில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,084 ரன்களைக் குவித்த இவர், 7 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியவர். தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். 

பி.டி.ஐ. நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் இங்கிலாந்தில் இந்திய அணியின் சுற்றுப் பயணத்தின்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1க்கு 4 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்ததற்கு ரவிசாஸ்திரியே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று குற்றம்சாட்டினார். இரு அணிகளும் சம பலம் கொண்டவையாக இருந்தாலும் இங்கிலாந்து வீரர்களை கட்டுப்படுத்த இந்திய அணியினர் திணறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.  

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திலாவது இந்திய அணி வெல்ல வேண்டுமானால் ரவி சாஸ்திரி நீக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்திய அணி வரும் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே ரவிசாஸ்திரி அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சேட்டன் சர்மாதெரிவித்துள்ளார். எனினும் ரவிசாஸ்திரி கிரிக்கெட் விமர்சனங்களில் வாய்தேர்ந்தவர் என்று கூறிய சேட்டன் சர்மா அதற்கு அவரை தாராளமாக அனுமதிக்கலாம் என்றார்.

கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணி சிறந்த சுற்றுப் பயண அணியாக இருப்பதாக ரவிசாஸ்திரி கூறியிருப்பதையும் சேட்டன் சர்மா திட்டவட்டமாக மறுத்தார். ரவிசாஸ்திரி கூறியதை தன்னால் ஒப்புக்கொள்ளவே முடியாது என்று தெரிவித்த சேட்டன் சர்மா, 1980களில் இந்திய அணி உலகின் மிகச் சிறந்த சுற்றுப் பயண அணியாக இருந்ததாகக் கூறினார். 

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்த சேட்டன் சவுகான், இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஈடுகொடுத்து இளைய வீரர்களும் சிறப்பாக இணைந்து எதிர்கொள்வதால் வெற்றிக்கனிக்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம் என்றார்.

click me!