4ம் வரிசையில் யாரை இறக்குவது..? கேப்டன் கோலியுடன் முரண்படும் ரோஹித்

By karthikeyan VFirst Published Jan 13, 2019, 11:00 AM IST
Highlights

4ம் வரிசை வீரர் குறித்து கேப்டன் கோலியின் கருத்திலிருந்து துணை கேப்டன் ரோஹித் சர்மா முரண்பட்டுள்ளார். 
 

4ம் வரிசை வீரர் குறித்து கேப்டன் கோலியின் கருத்திலிருந்து துணை கேப்டன் ரோஹித் சர்மா முரண்பட்டுள்ளார். 

நீண்ட தேடுதல் படத்திற்கு பிறகு, உலக கோப்பைக்கு முன்னதாக 4ம் வரிசை வீரராக அம்பாதி ராயுடு உறுதி செய்யப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், அம்பாதி ராயுடு உள்ளிட்ட பல வீரர்களை அந்த இடத்தில் சோதித்து பார்த்ததில் தேறியவர் ராயுடுதான். ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடி 4ம் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 4 ரன்னுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், சுத்தமாக ஃபார்மில் இல்லாத தோனி, 5ம் வரிசை வீரராக, 4வது ஓவரிலேயே களத்திற்கு வந்தார். ரோஹித்துடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், தோனியின் அவுட் ஆஃப் ஃபார்ம் இந்திய அணிக்கு பெரிய குறையாகவும் சுமையாகவும் இருந்தது. ஆனால் தோனியின் நேற்றைய பேட்டிங், அந்த கவலையை போக்கியது. 

இதையடுத்து 4ம் வரிசை வீரர் குறித்து பேசிய ரோஹித் சர்மா, நான்காம் வரிசையில் தோனி ஆடுவது அணிக்கு நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆனால் ராயுடு 4ம் வரிசையில் சிறப்பாக ஆடிவருகிறார். அதுமட்டுமல்லாமல் இது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என்ன நினைக்கிறார்கள் என்பதை சார்ந்தது. ஆனால் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால், நான்காம் வரிசையில் தோனியை இறக்குவது சிறந்தது என்பேன் என்றார் ரோஹித்.

4ம் வரிசையில் ராயுடு சிறப்பாக ஆடிவரும் நிலையில், 4ம் இடம் ராயுடுவுக்குத்தான் என்றும் அந்த இடத்தில் ஆடுவதற்கு அவர் சரியான வீரர் என்றும் கேப்டன் கோலி தெரிவித்திருந்த நிலையில், அதிலிருந்து முரண்பட்டு தோனியை இறக்குவதுதான் தனது தனிப்பட்ட கருத்து என்றிருக்கிறார் ரோஹித். 

click me!