தோனிக்கு அதிர்ச்சி அளிக்க காத்திருக்கும் ரோஹித்!!

First Published Apr 7, 2018, 10:18 AM IST
Highlights
rohit batting order surprise


ஐபிஎல் 11வது சீசன் இன்று தொடங்குகிறது. 10 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 11வது சீசன் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. 

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் சென்னை அணி களமிறங்குகிறது. இன்றைய முதல் போட்டியே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் இடையே நடைபெறுகிறது. 

இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மூன்று முறை சென்னையும் மும்பையும் இறுதி போட்டியில் மோதியுள்ளன. அவற்றில் இரண்டில் மும்பையும் ஒன்றில் சென்னையும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றின. 

ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை சென்னையும் மும்பையும் கடும் போட்டியாளர்கள். இந்நிலையில், முதல் போட்டியே சென்னைக்கும் மும்பைக்கும் இடையே நடைபெற இருப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

இந்த தொடரில் ரோஹித் எந்த வரிசையில் களமிறங்குவார் என்பதே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரராக இருக்கும் ரோஹித், ஐபிஎல் போட்டிகளை பொறுத்தமட்டில், தொடக்க வீரராக களமிறங்கியதில்லை. நடு வரிசையில்தான் இறங்கிவருகிறார். ஆனால், இந்த முறை தொடக்க வரிசைகளில் இறங்குவாரா? இல்லை வழக்கம்போல நடுவரிசையில் இறங்குவாரா? என்பது ரகசியமாக உள்ளது.

அதுவே சென்னை அணிக்கு பெரும் சவாலாக இருக்கும். இதுவரை ரோஹித், ஐபிஎல்லில் தொடக்க வீரராக இறங்காததால், அதற்கேற்றபடி வியூகங்களை சென்னை அணி வகுத்திருந்தால், திடீரென ரோஹித், தொடக்கத்தில் களமிறங்கினால், அதுவே பெரிய அதிர்ச்சியாகவும் சவாலாகவும் இருக்கும்.

இதுதொடர்பாக பேசியுள்ள ரோஹித், மும்பை அணியின் மிடில் ஆர்டர் வலுவாக இருக்கிறது. எல்வின் லெவிஸ் (வெஸ்ட் இண்டீ ஸ்), இஷான் கிஷான் போன்ற சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள். அதனால், நான் ஓபனிங்கில் இறங்குவேனா என்பது பற்றி தெரியவில்லை. எந்த வரிசையில் இறங்கி ஆடுவேன் என்பதை சர்பிரைஸாக வைத்திருக்கிறேன். 

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.  இனி களத்தில் பார்க்க வேண் டியதுதான். ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க வேண்டியிருப்பதால், நெருக்கடி இருப்பதாக நினைக்க மாட்டேன். நான் அப்படி பார்க்கவில்லை. அதை பொறுப்பாக எடுத்துகொள்கிறேன். பெருமையாகவும் பார்க்கிறேன் என ரோஹித் தெளிவாக பேசியுள்ளார்.
 

click me!