தங்கம் வென்ற தங்கத் தமிழன்….. வேலூர் மண்ணின் மைந்தனுக்கு குவியும் பாராட்டு...

 
Published : Apr 07, 2018, 08:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
தங்கம் வென்ற தங்கத் தமிழன்….. வேலூர் மண்ணின் மைந்தனுக்கு  குவியும் பாராட்டு...

சுருக்கம்

commen wealth games sathees won gold medal

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஆண்கள் பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார். இதன் மூலம் பளு தூக்குதலில் இந்தியாவிற்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது.. இதில் ஆண்கள் பளு தூக்குதல் போட்டியின் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார்.

ஏற்கனவே ,பளுதூக்குதலில், 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சிகோம் மிராபாய் சானு, 53 கிலோ எடை பிரிவில் சஞ்சிதா சானு  ஆகியோர் தங்கம் வென்றனர்.

தற்போது சதீஷ் சிவலிங்கம் தங்கம் வெற்றதன் மூலம் இந்தியா, பளுதூக்குதல் பிரிவில் 3-வது தங்கம் வென்றது. இதனை யடுத்து பதக்க பட்டியில் 3 தங்கம் ஒரு வெள்ளி ,ஒரு வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 


பதக்கம் வென்ற சதீஷ் சிவலிங்கம் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர். பதக்கம் வென்றது குறித்து அவரது பெற்றோர் மகிழ்ச்சி  தெரிவித்துள்ளனர். சதீஷ் சிவலிங்கம்  கடந்த 2014 ம்ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற  காமன்வெல்த் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

தற்போது இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்த வேலூர் மண்ணின் மைந்தனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!