3 தடவை செய்த தவறை இந்த முறை செய்யக்கூடாது!! அதிரடி மன்னர்கள் அடங்கிய பெங்களூரு

First Published Apr 6, 2018, 3:44 PM IST
Highlights
kohli headed rcb condition in this ipl


ஐபிஎல் 11வது சீசன் கோலாகலமாக நாளை தொடங்குகிறது. 10 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. நாளை தொடங்கும் 11வது சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையும் முன்னாள் சாம்பியன் சென்னையும் மோதுகின்றன.

இந்த ஐபிஎல் தொடர், பஞ்சாப், டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகளுக்கு மிக முக்கிய தொடராக அமைந்துள்ளது. இந்த மூன்று அணிகளும் தான் இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. அதிலும், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள், கடந்த 10 சீசனில் பேசும்படியாக எதுவும் செய்ததில்லை.

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள், இதுவரை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கே தடுமாறியுள்ளனர். அதனால் இந்தமுறை அந்த அணிகள் புதிய உத்வேகத்துடன் களமிறங்குகின்றன.

ஆனால், மூன்று முறை இறுதி போட்டிக்கு தகுதிபெற்று, தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ள பெங்களூரு அணி இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம்வரும் கோலியின் தலைமையின் கீழ் இயங்கும் பெங்களூரு அணி, இந்தமுறை ஐபிஎல் தொடரை வெல்வதற்காக தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில், கோலி, டிவில்லியர்ஸ், கெய்ல் என சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களை கொண்டிருந்தும் பவுலிங் சரியாக இல்லாமல் தவித்து வந்தது பெங்களூரு அணி.

ஆனால், இந்த முறை சிறந்த பவுலர்களையும் கொண்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர், இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் சிறப்பாக பந்துவீசினார். பவர்பிளே ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துவதில் சுந்தர் சிறந்த பங்களிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கை பொறுத்தவரை, கோலி, டிவில்லியர்ஸ், மெக்கல்லம், பார்திவ் படேல், கோரி ஆண்டர்சன், மனன் வோரா, டி காக், கிராண்ட் ஹோம், ஆகியோர் உள்ளனர். வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக பேட்டிங் செய்வார்.

எனவே வலுவான பேட்டிங் ஆர்டருடன் சுந்தர், வோக்ஸ், சாஹல், உமேஷ், பவன் நேகி, முருகன் அஸ்வின், சைனி, கோரி ஆண்டர்சன் ஆகிய பவுலர்களையும் கொண்டிருப்பதால், கோப்பையை வெல்ல பெங்களூரு முனைப்பு காட்டுகிறது.

வீரர்களுக்கு அப்பாற்பட்டு வெற்றிக்கு தேவையான வியூகங்களை அமைத்து செயல்படுத்துவதுதான் முக்கியம். கோலி தலைமையிலான பெங்களூரு, இதுவரை அதில் சற்றே சறுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் மூன்று ஐபிஎல் இறுதி போட்டிக்கு சென்று கோப்பையை தவறவிட்ட தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில், அந்த அணி உறுதியாக உள்ளது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:

கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், பார்திவ் படேல், மெக்கல்லம், கோரி ஆண்டர்சன், வாஷிங்டன் சுந்தர், டி கிராண்ட்ஹோம், டி காக், சாஹல், முருகன் அஸ்வின், மோயின் அலி, பவன் டெஷ்பேண்டே, அனிருதா ஜோஷி, மந்தீப் சிங், சிராஜ், பவன் நேகி, டிம் சௌதி, மனன் வோரா, உமேஷ் யாதவ், கிறிஸ் வோக்ஸ், நவ்தீப் சைனி, சர்ஃபராஸ் கான்
 

click me!