
இலங்கை முத்தரப்பு டி20 தொடரின் இறுதி போட்டி கொழும்புவில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்தியா-வங்கதேச அணிகள் இறுதி போட்டியில் மோதுகின்றன.
இந்நிலையில், இந்த போட்டி குறித்து பேசிய இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவின் முதல் தர அணியானாலும் சரி, 2ம் நிலை அணியானாலும் சரி, வங்கதேசத்துடன் ஆடினால் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றுவிட்டால், ஓகே வங்கதேசத்தை வென்றுவிட்டீர்கள் என்பார்கள். அதே தோற்றுவிட்டால், வங்கதேசத்திடம் போய் தோல்வியடைந்திருக்கிறீர்கள். என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று தொனியை மாற்றி கேட்பார்கள்.
சில முன்னணி வீரர்கள் இல்லை என்றாலும் கடந்த ஓராண்டாக அவர்கள் இருந்த போது எப்படி ஆடினாமோ, அப்படியே ஆடுவோம்.. அது எந்த அணியாக இருந்தாலும் சரி, சிறப்பாக விளையாட வேண்டும் என்றே ரோஹித் வலியுறுத்துவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.