
நியூஸிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் (ஆசிய - ஓசியானியா குரூப் 1) விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து ரோஹன் போபண்ணா நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி இதற்கு முன்னர் ஸ்பெயினுக்கு எதிராக விளையாடியபோது நடால் - லோபஸ் ஜோடிக்கு எதிராக லியாண்டர் பயஸ் - சாகேத் மைனேனி ஜோடி சிறப்பாக ஆடியது.
அதைக் கருத்தில் கொண்டு இப்போது போபண்ணா நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் தேர்வுக் குழுவினர், "போபண்ணாவை சேர்க்கும்போது ஒற்றையர் பிரிவில் விளையாடக்கூடிய 3-ஆவது வீரரை தேர்வு செய்ய முடியாத நிலை இருந்தது.
இப்போது போபண்ணா நீக்கப்பட்டதன் மூலம் 3-ஆவது ஒற்றையர் வீரர் இடம் பெறுவார்' எனத் தெரிவித்தனர்.
இந்தப் போட்டி வரும் பிப்ரவரி 3 முதல் 5 வரை புனேவில் நடைபெற இருக்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.