என்னதான் சாதனை பண்ணாலும் மொக்க விக்கெட் கீப்பர்னு திரும்ப திரும்ப நிரூபிக்கும் ரிஷப் பண்ட்!! வீடியோ

By karthikeyan VFirst Published Dec 10, 2018, 4:10 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச்களை பிடித்து, ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் 11 கேட்ச்களை ஏற்கனவே பிடித்திருந்த ரசல் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோருடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டார். 
 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் அதிகமான கேட்ச்களை பிடித்து சாதனை செய்தாலும், தான் ஒரு மோசமான விக்கெட் கீப்பர் என்பதை பறைசாற்றும் வகையில் ஒரு கேட்ச்சை விட்டு அவர் மீதான விமர்சனங்களுக்கு மேலும் வலு சேர்த்தார் ரிஷப் பண்ட். 

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் அப்போதே கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவரது விக்கெட் கீப்பிங் டெக்னிக் சரியில்லை என்று முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்தனர். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் சில கேட்ச்களை தவறவிட்டதோடு, அவ்வப்போது சில பந்துகளை பிடிக்காமல் தவறவிட்டார். அது அவரது விக்கெட் கீப்பிங் மீதான விமர்சனத்துக்கு வலு சேர்த்தது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். அவர் பேட்டிங் நன்றாக ஆடுவதால் அணியில் எடுக்கப்பட்டார். எனினும் அவரை மட்டும் விக்கெட் கீப்பிங்கிற்கு நம்பாமல் அனுபவ வீரர் பார்த்திவ் படேலும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். எனினும் ஆடும் லெவனில் பண்ட் தான் இடம்பிடித்தார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச்களை பிடித்து, ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் 11 கேட்ச்களை ஏற்கனவே பிடித்திருந்த ரசல் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோருடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டார். 

இப்படியாக ஒரு போட்டியில் அதிகமான கேட்ச்களை பிடித்து சாதனை செய்தாலும் மறுபுறம் மோசமான ஒரு முயற்சியால் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னின் கேட்ச்சை கோட்டைவிட்டார். அது ஒன்றே அவர் மீதான விமர்சனங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. 

ஷமி வீசிய பந்தை பின்னால் அடிக்க முயன்றார் டிம் பெய்ன். ஆனால் பந்து பேட்டில் பட்டு எட்ஜாகி சென்றது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு இடது புறமாக சென்ற அந்த பந்தை வலது கையில் தாவிப்பிடிக்க முயன்றார் ரிஷப் பண்ட். ஆனால் பந்து கையில் கூட படாமல் சென்றுவிட்டது. இடது கையில் பிடிக்க முயன்றிருந்தால் கேட்ச் பிடித்திருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை கேட்ச்சிற்கு எட்டவில்லை என்றாலும் பந்து கையிலாவது பட்டிருக்கும். ஆனால் தனது மோசமான டெக்னிக்கால் அந்த கேட்ச்சை தவறவிட்டார் ரிஷப் பண்ட். 

How not to keep wicket, by Rishabh Pant ❌❌❌

LIVE : https://t.co/54MrZVHfil pic.twitter.com/E93nI584bw

— Telegraph Sport (@telegraph_sport)

டிம் பெய்ன் 12 ரன்னில் இருக்கும்போது அந்த கேட்ச்சை பண்ட் தவறவிட்டார். அதன்பிறகு சிறப்பாக ஆடிய பெய்ன், 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஒருவேளை அவர் அவுட்டாகவில்லையென்றால் போட்டியின் முடிவு மாறியிருக்கக்கூட வாய்ப்புள்ளது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை விக்கெட் கீப்பிங் மிகவும் முக்கியம் என்பதை புரிந்துகொண்டு ரிஷப் பண்ட், இனிமேலாவது கீப்பிங்கில் கவனம் செலுத்தி தனது தவறுகளை திருத்திக்கொண்டு சிறப்பாக செயல்படுவாரா என்று பார்ப்போம்.
 

click me!