அவரு ஒரு ஆள அவுட் ஆக்குறதுக்குள்ள எங்களுக்கு நாக்கு தள்ளிருது!! ஓபனா ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய கேப்டன்

By karthikeyan VFirst Published Dec 10, 2018, 3:34 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியின் பின்வரிசை வீரர்களின் போராட்டத்தை கண்டு மனம் தளராத இந்திய பவுலர்கள், கடைசி வரை உறுதியுடன் பந்துவீசி அந்த அணியை ஆல் அவுட் செய்து இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். 

இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் வீரர் புஜாராவை வீழ்த்துவதற்கு மிகவும் கடினமாக உள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கியதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாவிட்டாலும் கூட, ஆஸ்திரேலிய அணி கடைசி வரை உறுதியுடன் போராடியது. குறிப்பாக பின்வரிசை வீரர்களான கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட் ஆகியோர் பேட்டிங் ஆடிய விதம் அபாரமானது. 

எனினும் ஆஸ்திரேலிய அணியின் போராட்டத்தை கண்டு மனம் தளராத இந்திய பவுலர்கள், கடைசி வரை உறுதியுடன் பந்துவீசி அந்த அணியை ஆல் அவுட் செய்து இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். 

போட்டி முடிந்ததும் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், எங்கள் அணியின் பின்வரிசை வீரர்கள் கடைசி வரை போராடியது பெருமையாக இருக்கிறது. இந்திய அணி இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். நாங்கள் வெற்றி பெற்றிருக்கலாம் என்பதில் மாற்று கருத்து இல்லை. எனினும் நானும் ஷான் மார்ஷும் டிராவிஸ் ஹெட்டும் பெரிய இன்னிங்ஸை ஆடியிருக்க வேண்டும். இந்திய அணியில் புஜாரா ஆடியதை போன்ற இன்னிங்ஸை நாங்கள் ஆடவில்லை. இந்த போட்டியில் புஜாராவின் பேட்டிங் மட்டும்தான் இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் வித்தியாசமாக அமைந்தது. போட்டியின் முடிவை தீர்மானித்தது அவரது பேட்டிங்தான். புஜாராவை வீழ்த்துவது உண்மையாகவே மிகவும் கடினமாக உள்ளது. இந்த போட்டியில் தோற்றிருந்தாலும் டெஸ்ட் தொடரை நாங்கள் வெல்வோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் நம்பிக்கை தெரிவித்தார். 

இரண்டு இன்னிங்ஸ்களிலும் புஜாராவின் பேட்டிங் மிக முக்கியமானது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த புஜாரா, இரண்டாவது இன்னிங்ஸிலும் 71 ரன்களை குவித்தார். இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சிறப்பாக ஆடிய ஒரே வீரர் புஜாராதான். 
 

click me!