தம்பி அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாப்ள போல.. வேற ஆள பார்க்குறது நல்லது!!

By karthikeyan VFirst Published Nov 23, 2018, 3:56 PM IST
Highlights

ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சோபிப்பதும் சோபிக்காததும் ஒரு புறம் இருந்தாலும் விக்கெட் கீப்பிங்கில் தொடர்ந்து சொதப்பிவருகிறார். 
 

ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சோபிப்பதும் சோபிக்காததும் ஒரு புறம் இருந்தாலும் விக்கெட் கீப்பிங்கில் தொடர்ந்து சொதப்பிவருகிறார். 

தோனிக்கு பிறகு அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்கிவருகிறது இந்திய அணி. ஆனால் இளம் வீரர் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிவருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அப்போதே அவரது விக்கெட் கீப்பிங் டெக்னிக் விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உள்ளானது. 

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இருந்த சிக்கல், விக்கெட் கீப்பராக இல்லாமல் வெறும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. அந்த வாய்ப்பை அவர் பெரிதாக பயன்படுத்தி கொள்ளாவிட்டாலும் 5ம் வரிசையில் அவர் தொடர்ந்து களமிறக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

2020 டி20 உலக கோப்பையை மனதில்வைத்து தோனி டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு டி20 அணியிலும் ரிஷப் பண்ட் இடம்பிடித்துவிட்டார். ஆனால் பேட்டிங்கில் ஓரளவிற்கு சோபிக்கும் ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கில் தொடர்ந்து சொதப்பிவருகிறார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்துவரும் இரண்டாவது டி20 போட்டியில் கேட்ச்சை தவறவிட்டதோடு, பந்துகளையும் மிஸ் செய்தார். விக்கெட் கீப்பர் பந்தை பிடிக்க தவறுவது என்பது அணிக்கு பேராபத்து. விக்கெட் கீப்பர் விட்டாலே பந்து பவுண்டரிக்கு ஓடிவிடும். இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய இன்னிங்ஸின்போது புவனேஷ்வர் குமார் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் ஷார்ட் அடித்த பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால் அந்த கேட்ச்சை தவறவிட்டார் ரிஷப் பண்ட். மேலும் பேட்ஸ்மேன் அடிக்கத்தவறிய பந்துகளையும் தவறவிடுகிறார். 

தோனியின் இடத்தை பூர்த்தி செய்யும் நோக்கில் அணியில் வாய்ப்பை பெற்றிருக்கும் ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கில் தன்னை வளர்த்துக்கொள்ளவில்லை என்றால் வாய்ப்பு பறிபோகும் அபாயம் உருவாகும். ஏற்கனவே இவரது விக்கெட் கீப்பிங்கில் குறைபாடுகள் இருப்பதால்தான் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பார்த்திவ் படேலும் சேர்க்கப்பட்டிருக்கிறார். 
 

click me!