
சென்னை ஹாக்கி சங்கத்தின் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பெருமாளை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஹாக்கி சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் கடந்த மே மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று லிங்கராஜ் நினைவு கிளப்பின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்தது. இந்த விவகாரத்தில் சுமூகத்தீர்வு ஏற்பட்டதால் தடையை நீக்க வேண்டும் என்று இரு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கே.பெருமாளை நியமித்து உத்தரவிட்டார். நீதிபதி பெருமாள் தகுதியான உறுப்பினர்களின் பட்டியலை தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும்.
பின்னர் இதுகுறித்து மூன்று வார காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.