
இந்தியாவில் பேட்மிண்டனுக்குக் கூடுதல் கவனம் கிடைக்க கவர்ச்சித் தேவை என்று பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா தெரிவித்தார்.
பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் டெல்லி அணியில் இடம் பெற்றுள்ளார் பிரபல வீராங்கனை ஜூவாலா கட்டா.
அவர் பேட்மிண்டன் விளையாட்டில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் குறித்து தெரிவித்தார்.
அதில், “விளையாட்டு அரங்கிலும் அதன் வெளியேயும் என்ன உடை உடுத்துகிறேன் என்பதில் எப்போதும் என் கவனம் இருக்கும். ஆனால், எல்லோரும் அப்படி இருக்கிறார்கள் என்பதும் பேட்மிண்டனில் இதற்கென தனி அடையாளம் கிடைப்பதும் நல்ல விஷயம்.
இந்த மாற்றத்தை இரு கரங்களாலும் வரவேற்கிறேன். நாம் சமூகவலைத்தளங்களின் தாக்கம் உள்ள காலத்தில் வாழ்க்கிறோம். பளிச் என்று இருப்பது உங்கள் கண்ணில் படும்.
இந்தியாவில் பேட்மிண்டனுக்குக் கூடுதல் கவனம் கிடைக்க கவர்ச்சித் தேவை. இதன்மூலம் பேட்மிண்டனுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.