இவர நம்பி இருந்த ஆளையும் தூக்கி போட்டோமே!! ஆர்சிபி அணிக்கு பேரதிர்ச்சி

By karthikeyan VFirst Published Dec 16, 2018, 3:01 PM IST
Highlights

இதுவரை 11 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ்(டெல்லி டேர்வில்ஸ்) ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை வென்றதில்லை.
 

ஐபிஎல் 12வது சீசனுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேரி கிறிஸ்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்திருந்த நிலையில், அவர் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பது ஆர்சிபி அணியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

இதுவரை 11 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ்(டெல்லி டேர்வில்ஸ்) ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை வென்றதில்லை.

எனவே அடுத்த சீசனை வெல்லும் உறுதியில் இந்த மூன்று அணிகளும் பல தீவிர முயற்சிகளை எடுத்துவருகின்றன. அந்த வகையில் ஆர்சிபி அணி, தலைமை பயிற்சியாளராக இருந்த டேனியல் வெட்டோரியை நீக்கிவிட்டு, அந்த பொறுப்பில் கேரி கிறிஸ்டனை அண்மையில் நியமித்தது. 

இந்நிலையில், இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த பதவிக்கான நேர்காணல் வரும் 20ம் தேதி நடக்க உள்ளது. அதற்கு கேரி கிறிஸ்டன் விண்ணப்பித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிப்ஸ், இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் ஆகியோரும் விண்ணப்பித்துள்ள இந்த பொறுப்புக்கு கிறிஸ்டனும் விண்ணப்பித்துள்ளார். 

ஒருவேளை கேரி கிறிஸ்டன் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படும் பட்சத்தில், அவரால் ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக செயல்பட முடியாது. எனவே ஆர்சிபி அணி அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஏற்கனவே ஆர்சிபி அணி அவரை பயிற்சியாளராக நியமித்துவிட்ட நிலையில், அணி நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் கிறிஸ்டன், இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். 

கிறிஸ்டன் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். இவர் பயிற்சியாளராக இருந்த காலக்கட்டத்தில்தான், 2011ல் தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. 

click me!