
பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே 45வது லீக் போட்டி நேற்று டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். பிரித்வி ஷாவும் ஜேசன் ராயும் தொடக்கத்திலேயே அவுட்டாகினர். ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக நிதானமாக ஆடிவந்த ஷ்ரேயாஸ் ஐயர் 32 ரன்களில் வெளியேறினார். வழக்கம்போலவே அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட், 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 34 பந்துகளுக்கு 61 ரன்கள் குவித்து அவுட்டானார். அதன்பிறகு களமிறங்கிய அபிஷேக் சர்மா, இறுதியில் அதிரடியாக ஆடி 19 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.
ரிஷப் பண்ட், அபிஷேக் சர்மாவின் அதிரடியில் டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் மோயின் அலி மற்றும் பார்த்திவ் படேல் முறையே 1 மற்றும் 6 ரன்களில் வெளியேறினர். அதன்பிறகு விராட் கோலியும் டிவில்லியர்ஸும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது. 70 ரன்களில் கோலி அவுட்டாக, டிவில்லியர்ஸ் அதிரடியை தொடர்ந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காத டிவில்லியர்ஸ் 72 ரன்கள் குவித்த டிவில்லியர்ஸ், அணியையும் வெற்றியடைய செய்தார்.
19 ஓவருக்கே இலக்கை எட்டி பெங்களூரு வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.