ராயுடு - விஜய் சங்கர் பொறுப்பான பேட்டிங்!! கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திய விஜய்.. அரைசதம் அடித்த ராயுடு

By karthikeyan VFirst Published Feb 3, 2019, 10:08 AM IST
Highlights

ராயுடு - விஜய் சங்கர் ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து பவுலர்கள் திணறினர். போல்ட், ஹென்ரி, கோலின் டி கிராண்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், கோலின் முன்ரோ, சாண்ட்னெர் என மாறி மாறி பந்துவீசியும் அந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆட வாய்ப்பு பெற்ற விஜய் சங்கர், கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி சிறப்பாக பேட்டிங் ஆடி, ராயுடுவுடன் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டி வெலிங்டனில் இன்று காலை இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் முதல் 4 விக்கெட்டுகள் விரைவாகவே விழுந்துவிட்டன. ரோஹித் சர்மா(2), தவான்(6), ஷுப்மன் கில்(7), தோனி(1) என 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. 

அதன்பிறகு ராயுடுவும் விஜய் சங்கரும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இருவரும் பொறுப்புடன் பேட்டிங் ஆடினர். ராயுடு - விஜய் சங்கர் ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து பவுலர்கள் திணறினர். போல்ட், ஹென்ரி, கோலின் டி கிராண்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், கோலின் முன்ரோ, சாண்ட்னெர் என மாறி மாறி பந்துவீசியும் அந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் அணியில் இருந்தும் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காத விஜய் சங்கருக்கு இந்த போட்டியில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்தது. அதை நன்கு பயன்படுத்தி ஆடிய விஜய் சங்கர் 45 ரன்களில் ரன் அவுட்டாகி, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 

இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 98 ரன்களை சேர்த்தது. அதன்பிறகு ராயுடுவுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். ராயுடு அரைசதம் கடந்து ஆடிவருகிறார்.
 

click me!