ஒரு நல்ல ஃபீல்டரால் என்ன செய்ய முடியும்..? இந்த போட்டி தான் பதில்

By karthikeyan VFirst Published Feb 2, 2019, 4:14 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக ஃபீல்டிங் செய்து, ஃபீல்டிங்கிற்காகவே ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர்.
 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக ஃபீல்டிங் செய்து, ஃபீல்டிங்கிற்காகவே ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர்.

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர் முடிவில் 192 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்க அணி ஆடிய வேகத்திற்கு 220-230 ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் டேவிட் மில்லர் கடைசி ஓவர்களில் 12 பந்துகளில் வெறும் 10 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டும் ஆனார். அதிரடி வீரரான மில்லர், டெத் ஓவர்களில் சொதப்பியதால் ஸ்கோர் குறைந்தது. 

பேட்டிங்கில் சொதப்பினாலும் ஃபீல்டிங்கில் மிரட்டிவிட்டார் மில்லர். ஒரு ஃபீல்டரால் அணிக்கு என்ன நன்மை செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார். 193 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் களத்தில் நிலைத்து ஆடிக்கொண்டிருந்தார். 38 ரன்கள் அடித்திருந்த அவரை, அபாரமாக ரன் அவுட் செய்து வெளியேற்றினார் டேவிட் மில்லர். 

அதன்பிறகு இமாத் வாசிமிற்கு பிடித்த மிரட்டலான கேட்ச் உட்பட மொத்தம் 4 கேட்ச்களை பிடித்த மில்லர், முகமது ரிஸ்வானையும் ரன் அவுட் செய்தார். 4 கேட்ச்கள், 2 ரன் அவுட்டுகள் என களத்தில் ஃபீல்டிங்கில் மிரட்டினார் மில்லர். 193 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. 

ஃபீல்டிங்கில் மிரட்டிய டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

click me!