
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 326 ஓட்டங்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசம் மற்றும் தமிழக அணிகள் மோதிய ஆட்டம் இந்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மத்தியப் பிரதேசம் 90.1 ஓவர்களில் 264 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அங்கித் சர்மா அதிகபட்சமாக 77 ஓட்டங்கள் எடுத்தார்.
தமிழகத்தின் விக்னேஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழக அணியில் ஜெகதீசன் 101 ஓட்டங்கள் எடுக்க, மகேஷ் 103 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திரஜித் 25 ஓட்டங்கள், முகமது 43 ஓட்டங்கள், சாய் கிஷோர் 14 ஓட்டங்களுடனும் இதர வீரர்கள் ஒற்றை இலக்கத்திலும் வீழ்ந்தனர்.
மத்திய பிரதேசத்தின் பாண்டே மற்றும் புனீத் தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.
பின்னர் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய பிரதேசம், 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
பட்டிதார் 81 ஓட்டங்கள், சர்மா 41 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.