ரஞ்சி கோப்பை: தமிழகம் - மத்தியப் பிரதேச அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது...

First Published Nov 21, 2017, 9:47 AM IST
Highlights
Ranji Trophy Tamilnadu - Madhya Pradesh Died


ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் மற்றும் மத்தியப் பிரதேச அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த மத்திய பிரதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 90.1 ஓவர்களில் 264 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக அந்த அணியில் அங்கித் சர்மா 77 ஓட்டங்கள் எடுத்தார்.

தமிழகத்தின் விக்னேஷ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தமிழகம், 105.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்கள் குவித்தது.

இதில் அதிகபட்சமாக ஜெகதீசன் 101 ஓட்டங்கள், மகேஷ் 103 ஓட்டங்கள் எடுத்தனர்.

மத்திய பிரதேச தரப்பில் இஷ் பாண்டே, புனீத் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் 62 ஓட்டங்கள்பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய பிரதேசம் 102.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 351 ஓட்டங்கள்எடுத்து டிக்ளேர் செய்தது.

ஹர்பிரீத் சிங் அதிகபட்சமாக 100 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தமிழக தரப்பில் விக்னேஷ் மூன்று விக்கெட்டுகள் எடுத்தார்.

இதில், 290 ஓட்டங்கள் என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழகம் 25 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வர, போட்டி சமன் ஆனது.

அபராஜித் 30 ஓட்டங்கள், அபினவ் முகுந்த் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

tags
click me!