ரஞ்சி கோப்பை: தமிழகம் - ஒடிஸா மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது...

First Published Nov 13, 2017, 10:57 AM IST
Highlights
Ranji Trophy Tamil Nadu - odisha match draw


ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் - ஒடிஸா அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது.

முதலில் தமிழகம் 165 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 530 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அடுத்து ஆடிய ஒடிஸா கடைசி நாளின் முடிவில் 187.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 533 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர், கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழகம் முதலில் பேட் செய்தது. அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 140 ஓட்டங்கள், விஜய் சங்கர் 100 ஓட்டங்கள், அபராஜித் 109 ஓட்டங்கள் எடுத்தனர். அபினவ் 12 ஓட்டங்கள், ஜெகதீசன் 88 ஓட்டங்கள், இந்திரஜித் 46 ஓட்டங்கள், வாஷிங்டன் சுந்தர் 14 ஓட்டங்கள், விக்னேஷ் 10 ஓட்டங்கள் எடுக்க மகேஷ் டக் அவுட் ஆனார்.

தமிழகம் டிக்ளேர் செய்தபோது அபராஜித் 109 ஓட்டங்கள், ரஹீல் ஷா 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ஒடிஸா தரப்பில் சூர்யகாந்த் பிரதான் 3 விக்கெட்கள், சமந்த்ரே, கோவிந்த் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அடுத்து ஆடிய ஒடிஸா அணியில் நட்ராஜ் பெஹரா 91 ஓட்டங்கள், ராஜேஷ் துபர் 97 ஓட்டங்கள் எடுத்தனர். பட்நாயக் 66 ஓட்டங்கள், கோவிந்த் 29 ஓட்டங்கள், சேனாபதி 4 ஓட்டங்கள், சாந்தனு மிஸ்ரா 71 ஓட்டங்கள், சமந்த்ரே 50 ஓட்டங்கள், சாஹு 36 ஓட்டங்கள், பிரதான் 43 ஓட்டங்கள் எடுத்தனர்.

ஆட்டநேர முடிவில் மோஹந்தி 18 ஓட்டங்கள், திரஜ் சிங் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தமிழக தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்கள் மகேஷ் 3 விக்கெட்கள், சங்கர், ரஹீல் ஷா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அதன்படி தமிழகம் - ஒடிஸா ஆடிய ஆட்டம் சமனில் முடிந்தது.

இந்த ஆட்டத்தில் அபராமாக ஆடிய ஒடிஸாவின் ராஜேஷ் துபர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

tags
click me!