கோலியை காலி செய்த ரஹானே.. பெங்களூருவை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி

First Published Apr 15, 2018, 8:05 PM IST
Highlights
rajasthan royals defeat rcb


பெங்களூருவை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் 11வது சீசனின் 11வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூருவுக்கும் ராஜஸ்தானுக்கும் இடையே நடந்தது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்களாக ரஹானேவும் ஷார்ட்டும் களமிறங்கினர். ஷார்ட் மந்தமாக ஆட, ரஹானே அடித்து ஆடினார். 36 ரன்கள் எடுத்து ரஹானேவும் வெறும் 11 ரன்களில் ஷார்ட்டும் அவுட்டாகினர்.

சஞ்சு சாம்சனும் பென் ஸ்டோக்ஸும் நிதானமாகவும் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடினர். அடித்து ஆடிய சாம்சன், 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன்பிறகு உமேஷ் யாதவ், வோக்ஸ், கேஜ்ரோலியா ஆகியோரின் பந்துகளில் சிக்ஸர் மழை பொழிந்தார்.

36 பந்துகளில் அரைசதம் கடந்த  சாம்சன், 45 பந்துகளில் 92 ரன்களை குவித்தார். 10 சிக்ஸர்கள் விளாசினார். சாம்சனின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமலும் அவரது விக்கெட்டை வீழ்த்த முடியாமலும் கோலி திகைத்து நின்றார். சாம்சனின் அதிரடி ஆட்டத்தால், ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 217 ரன்களை குவித்தது.

218 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் மெக்கல்லம் தொடக்கத்திலேயே அவுட்டானார். கோலி அரைசதம் அடித்து அவுட்டானார். டி காக், டிவில்லியர்ஸ் ஆகியோரும் அவுட்டாகினர்.

வாஷிங்டன் சுந்தர் - மந்தீப் சிங் ஜோடி பெங்களூரு அணிக்கு நம்பிக்கையை விதைத்தது. 3 சிக்ஸர்களுடன் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். மந்தீப் சிங் 47 ரன்கள் அடித்தார். ஆனால் பெங்களூரு அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 198 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 45 பந்துகளில் 92 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான், புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
 

click me!