உலக கோப்பை அணியில் ரெய்னா..?

By karthikeyan VFirst Published Feb 21, 2019, 5:02 PM IST
Highlights

ஒருநாள் அணியில் சிறிது காலம் ஓரங்கட்டப்பட்டிருந்த ரெய்னா, இங்கிலாந்து தொடரில் ஆடினார். ஆனால் அத்தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. இதையடுத்து மீண்டும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். 

தோனி தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரெய்னா, தற்போது ஃபார்மில்லாமல் தவித்துவருவதால் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார். 

இளம் வீரர்கள் வரிசைகட்டி நிற்பதால் இனிமேல் சுரேஷ் ரெய்னாவிற்கான வாய்ப்பு சந்தேகம்தான். எனினும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸில் செல்லப்பிள்ளையாக திகழும் சுரேஷ் ரெய்னா, அடுத்த சீசனிலும் சென்னை அணிக்காக ஆட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை அணியில் தக்கவைத்துள்ளது. 

தோனி தலைமையில் இந்திய அணி 2011ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோதும் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்றபோதும் அந்த அணியில் ரெய்னா இருந்தார். 2015ம் ஆண்டு நடந்த உலக கோப்பையிலும் இந்திய அணியில் ஆடினார். 

ஒருநாள் அணியில் சிறிது காலம் ஓரங்கட்டப்பட்டிருந்த ரெய்னா, இங்கிலாந்து தொடரில் ஆடினார். ஆனால் அத்தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. இதையடுத்து மீண்டும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அதன்பிறகு ஒருநாள் அணியில் ரெய்னா எடுக்கப்படவில்லை. 

மார்ச் 23ம் தேதி ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் டாப் ஸ்கோர் அடித்த வீரரான ரெய்னா, இந்த தொடரை பெரிதும் எதிர்நோக்கியுள்ளார். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடுவதன்மூலம் உலக கோப்பை அணியில் இடம்பெற முடியும் என ரெய்னா நம்புகிறார். மிகச்சிறந்த ஃபீல்டரான ரெய்னாவை, அண்மையில் கூட ஃபீல்டிங் ஜாம்பவான் ஜாண்டி ரோட்ஸ், டாப் 5 ஃபீல்டர்களில் ஒருவராக ரெய்னாவை தேர்வு செய்தார். 

ஐபிஎல் நெருங்கிவிட்ட நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ரெய்னா, இங்கிலாந்து தொடரில் ஆடுவதற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், கிடைத்த வாய்ப்புகளில் நன்றாகவே ஆடினேன். ஆனால் அணியிலிருந்து ஓரங்கட்டப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் இதற்கெல்லாம் நாம் வேறு யாரு மீதும் குற்றம்சாட்ட முடியாது. நான் கடுமையாக உழைத்து எனது ஆட்டத்திலும் ஃபிட்னெஸிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். எனது பணியை தொடர்ந்து சிறப்பாக செய்ய முனைகிறேன் என ரெய்னா தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடுவதன் மூலம் உலக கோப்பை அணியில் இடம்பெற முடியும் என ரெய்னா நம்புகிறார். 
 

click me!