எவ்வளவு சூப்பரா ஆடினாலும் ரெய்னாவுக்கு இடம் கிடைக்க சான்ஸே இல்ல.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Feb 23, 2019, 10:57 AM IST
Highlights

உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. ஒருசில இடங்களுக்கான வீரர்கள் மட்டும் ஆஸ்திரேலிய தொடரில் பரிசோதிக்கப்பட உள்ளனர். 13 வீரர்கள் உறுதியான விஷயம். 
 

உலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடக்கும் இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் வலுவாக திகழ்கின்றன. 

உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. ஒருசில இடங்களுக்கான வீரர்கள் மட்டும் ஆஸ்திரேலிய தொடரில் பரிசோதிக்கப்பட உள்ளனர். 13 வீரர்கள் உறுதியான விஷயம். 

15 வீரர்களை கொண்ட இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், விராட் கோலி(கேப்டன்), ராயுடு, கேதர் ஜாதவ், தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப் யாதவ், சாஹல் ஆகிய 12 வீரர்களும் உறுதி. ரிஷப் பண்ட் அணியில் இணைய வாய்ப்புள்ளது. 

மேலும் விஜய் சங்கர் மற்றும் ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அணியில் இணையலாம். ஆஸ்திரேலிய தொடரில் ராகுல் நன்றாக ஆடினால் ராகுல் அணியில் இருப்பார். இதைத்தவிர வேறு புதிய வீரர்கள் இடம்பெற வாய்ப்பேயில்லை. 

ஆனால் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி உலக கோப்பைக்கான அணியில் தனது பெயரையும் பரிசீலிக்க வைக்கும் முனைப்பில் இருக்கிறார் சுரேஷ் ரெய்னா. ஆனால் அதற்கெல்லாம் சான்ஸே இல்லை என்கிறார் ஹர்பஜன் சிங். உலக கோப்பைக்கான அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது. அதனால் இனிமேல் பெரிய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பில்லை. ஐபிஎல்லில் எவ்வளவுதான் சிறப்பாக ஆடினாலும் உலக கோப்பை அணியில் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 
 

click me!