மீண்டும் டெல்லி அணியின் கேப்டன் ஆனார் காம்பீர்!! ரெய்னாவுக்கு அடித்தது ஜாக்பாட்

Published : Sep 16, 2018, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 09:27 AM IST
மீண்டும் டெல்லி அணியின் கேப்டன் ஆனார் காம்பீர்!! ரெய்னாவுக்கு அடித்தது ஜாக்பாட்

சுருக்கம்

விஜய் ஹசாரே டிராபி தொடருக்கு உத்தர பிரதேச அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார்.   

விஜய் ஹசாரே டிராபி தொடருக்கு உத்தர பிரதேச அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். 

உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. 19ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மும்பை, டெல்லி, மகாராஷ்டிரா, கோவா, கேரளா, ஆந்திரா, ஹைதராபாத், மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல அணிகள் கலந்துகொள்கின்றன. 

இத்தொடரில் ஆடும் உத்தர பிரதேச அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். யோ யோ டெஸ்டில் தேறாததால், ஓராண்டாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த ரெய்னா, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடினார். அதிலும் பெரியளவில் சோபிக்கவில்லை. அதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்துவரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரெய்னாவிற்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் உத்தர பிரதேச அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரெய்னா தலைமையிலான இந்த அணியில், ரிங்கு சிங், அன்கிட் ராஜ்பூட் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். 

விஜய் ஹசாரே தொடரில் ஆடும் மும்பை அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததால், இவர்கள் இருவரும் விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக ஆடுகின்றனர். 

அதேபோல் டெல்லி அணியின் கேப்டனாக மீண்டும் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த அந்த அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து காம்பீர் விலகினார். இந்நிலையில், இம்முறை மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

காம்பீர் தலைமையிலான டெல்லி அணியில் ரிஷப் பண்ட், நிதிஷ் ராணா, உன்முக்த் சந்த், ஹிம்மத் சிங், மனன் ஷர்மா, பவன் நேகி உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

'வருத்தம்தான், ஆனால் பாகிஸ்தான் அரசுடன் நிற்பேன்'; தெளிவுபடுத்திய ஷாகித் அப்ரிடி
டி20 World Cup: இந்தியாவிடம் தொடர்ந்து மொக்கை வாங்கும் பாகிஸ்தான்..! 2007 - 2024 முழு ரிபோர்ட்