டிராவிட்டை கிண்டலடித்த ஸ்டீவ் வாக்!! வரலாற்று வெற்றியை பதிவு செய்து பதிலடி கொடுத்த ராகுல் டிராவிட்

By karthikeyan VFirst Published Sep 16, 2018, 11:57 AM IST
Highlights

கடந்த 2001ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரை ஆடியது. அந்த தொடரில் டிராவிட்டும் லட்சுமணனும் இணைந்து இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்ய உதவினர். அந்த போட்டியில் ராகுல் டிராவிட், நங்கூரம் போட்டு அணியை வெல்லவைத்ததன் பின்னணி குறித்து பார்ப்போம்.
 

கடந்த 2001ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரை ஆடியது. அந்த தொடரில் டிராவிட்டும் லட்சுமணனும் இணைந்து இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்ய உதவினர். அந்த போட்டியில் ராகுல் டிராவிட், நங்கூரம் போட்டு அணியை வெல்லவைத்ததன் பின்னணி குறித்து பார்ப்போம்.

2001ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடியது. இந்த தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. இந்த தொடரின் முதல் போட்டி மும்பையில் நடந்தது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

இரண்டாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 274 ரன்கள் பின் தங்கியதால் ஃபாலோ ஆன் பெற்ற இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. 

இரண்டாவது இன்னிங்ஸிலும் 232 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துவிட்டது. இந்நிலையில், முதல் இன்னிங்ஸில் 3வது வரிசையில் களமிறங்கிய ராகுல் டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் 6வது வரிசையில் களமிறக்கப்பட்டார். அதனால் டிராவிட் களத்திற்கு வந்ததும் அவரை சீண்டும் விதமாக, ராகுல் 3வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அடுத்து என்ன 12வது இடத்தில் இறங்குவாரா? என கிண்டலடித்துள்ளார். இது ஆஸ்திரேலிய அணியினருக்கே உரித்தான பண்பு. எதிரணி வீரர்களை சீண்டுவது அவர்களின் முழுநேர வேலை.

இதைக்கேட்டதும் நம்மால் ஒவ்வொரு பந்தாக எத்தனை பந்துகளை எதிர்கொள்ள முடியும் என்பதை பார்ப்போம் என ராகுல் டிராவிட் தனக்குள் நினைத்துக்கொண்டாராம். இதை அவரே ஒருமுறை தெரிவித்துள்ளார். அந்த இன்னிங்ஸில் 353 பந்துகளை எதிர்கொண்டு 180 ரன்களை குவித்தார் டிராவிட். லட்சுமணன் 281 ரன்களை குவித்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 376 ரன்களை குவித்தது. லட்சுமணன் - டிராவிட் ஜோடியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 657 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் பெற்ற ஒரு போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது. அதற்கு காரணம் ஸ்டீவ் வாக், டிராவிட்டை கிண்டலடித்ததுதான். அதனால் தான் டிராவிட் வீம்பாக ஆடி வெற்றியை பெற்றுக்கொடுத்தார். 
 

click me!