சீண்டி பார்த்த கம்மின்ஸை செம அடி அடித்த ராகுல்!! வீடியோ

Published : Dec 08, 2018, 12:29 PM IST
சீண்டி பார்த்த கம்மின்ஸை செம அடி அடித்த ராகுல்!! வீடியோ

சுருக்கம்

ஆஸ்திரேலிய பவுலர்கள் தொடர்ச்சியாக இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வதாக நினைத்து சில வார்த்தைகளை உதிர்க்கின்றனர். ஆனால் இந்திய வீரர்கள் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி ஆடிவருகின்றனர்.  

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜிங் செய்ய முனைகின்றனர். ஆனால் முன்பிருந்த ஆஸ்திரேலிய அணியை போல இவர்களால் ஸ்லெட்ஜிங் செய்ய முடியவில்லை. 

அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனெல்லாம் வம்பிழுத்தால் விக்கெட்டை அறுவடை செய்துவிடுவார். ஆனால் தற்போதைய ஆஸ்திரேலிய பவுலர்கள் வம்பு இழுக்க வேண்டும் என்பதற்காக எதையாவது பேசி வாங்கி கட்டிக் கொள்கின்றனர். 

முதல் இன்னிங்ஸில் பாட் கம்மின்ஸ், ரிஷப் பண்ட்டை நோக்கி சில வார்த்தைகளை உதிர்த்தார். ஆனால் ரிஷப் பண்ட் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் 11வது ஓவரை வீசிய கம்மின்ஸின் கடைசி பந்தில் ராகுல் பவுண்டரி அடிக்க, ராகுலை நோக்கி கம்மின்ஸ் சில வார்த்தைகளை உதிர்த்தார். 

அதை ராகுல் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கம்மின்ஸ் வீசிய 15வது ஓவரில் ஒரு அருமையான சிக்ஸர் மற்றும் பவுண்டரி விளாசி பதிலடி கொடுத்தார். 44 ரன்கள் அடித்த ராகுல், ஹேசில்வுட்டின் பந்தில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

PREV
click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து