மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்ததும், ராகுலும் ஹர்திக் பாண்டியாவும் ஜெர்சியை மாற்றிக்கொண்ட சம்பவம், ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஹர்திக் பாண்டியா தான் ஜெர்சியை மாற்ற முதலில் முன்வந்தார். பாண்டியா - ராகுலின் இந்த செயல், உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை காட்டும் விதமாக அமைந்திருந்தது. இதனால் இவர்களின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்துவருகிறது.
ஐபிஎல் 11வது சீசனின் 50வது லீக் போட்டி மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.
187 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியால், 183 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், 187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் அணியில் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் வெற்றிக்கு போராடிய ராகுல், 94 ரன்கள் எடுத்த நிலையில், 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரராக களமிறங்கி இறுதி வரை மன உறுதியுடன் போராடினார் ராகுல். 19வது ஓவரில் ராகுல் அவுட்டானதால் தான் மும்பை அணியால் வெற்றி பெற முடிந்தது. 94 ரன்கள் அடித்த ராகுல், 19வது ஓவரில் அவுட்டானதால், அணியையும் வெற்றியடைய செய்ய முடியாமல் போனது. அவரும் சதமடிக்க முடியாமல் போனது. பஞ்சாப் அணி தோற்றாலும், ராகுலின் முயற்சி பாராட்டுக்குரியது.
போட்டிக்கு பிறகு, ராகுலுக்கு ஆறுதல் கூறிய மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்டியா, ராகுலுடன் ஜெர்சியை மாற்றிக்கொண்டார். இருவரும் ஜெர்சியை மாற்றிக்கொண்டனர். ராகுல் மும்பை அணியின் நீல நிற ஜெர்சியையும், ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணியின் சிவப்பு நிற ஜெர்சியையும் அணிந்துகொண்டனர்.
இருவரும் மைதானத்திலேயே மாற்றிக்கொண்டனர். இவர்களின் உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை கண்டு ரசிகர்கள் வியந்தனர்.

Play hard, play fair! Respect comes first. ✊🏽

Super knock, by a super player and an even better friend @klrahul11 #MIvKXIP @mipaltan @lionsdenkxip pic.twitter.com/dNvF7BUqn0
— hardik pandya (@hardikpandya7) 17 May 2018

பொதுவாக கால்பந்து வீரர்கள் இதுபோல ஜெர்சியை மாற்றிக்கொள்வது வழக்கம். ஆனால் ஐபிஎல்லில் இதுதான் முதல்முறை. ராகுலும் ஹர்திக்கும் ஜெர்சியை மாற்றிக்கொண்ட வீடியோவும் அந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.