சிஎஸ்கே வீரரின் வித்தியாசமான பயிற்சி!! வைரலாகும் வீடியோ

Asianet News Tamil
Published : May 17, 2018, 02:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
சிஎஸ்கே வீரரின் வித்தியாசமான பயிற்சி!! வைரலாகும் வீடியோ

சுருக்கம்

csk player david willey new move at the practice session

இரண்டு ஆண்டு கால தடைக்கு பிறகு இந்த ஐபிஎல் சீசனில் ஆடிவரும் தோனி தலைமையிலான சென்னை அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றுவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த சீசனில் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டதில் இருந்தே ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர் ஆகியோர் தமிழில் டுவீட் போட்டு அசத்திவருகின்றனர்.

சென்னை அணியின் டுவிட்டர் பக்கம் எப்போதும் ஆக்டிவாகவே உள்ளது. விளம்பரங்களில் வீரர்கள் நடிப்பது, பயிற்சிகளை மேற்கொள்வது, வீரர்களின் குறும்புத்தனங்கள், கலகலப்பான தருணங்கள் என அனைத்துமே சென்னை அணியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு, ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தோனி, ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகிய மூவரின் குழந்தைகளும் ஒன்றாக விளையாடும் வீடியோ வைரலாகியது. தோனியின் காலில் ரசிகர் விழுந்த வீடியோ என சென்னை அணியின் டுவிட்டர் பக்கம் படு பிசியாகவே உள்ளது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில், ஃபீல்டிங்கின்போது ஜடேஜாவை தோனி பயமுறுத்திய வீடியோ வைரலானது. இந்நிலையில், தற்போது டேவிட் வில்லே பயிற்சியின்போது செய்த செயலின் வீடியோ வைரலாகி வருகிறது. பயிற்சியின்போது, ஓடிவந்துகொண்டிருக்கும் டேவிட் வில்லே, கேமராவை கண்டதும் பாக்ஸர் போன்ற செய்கைகளுடன் ஓடிவந்து கேமராவின் முன் நின்று ஒரு குத்து விட்டு திரும்பி ஓடுகிறார். சென்னை அணியின் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Willey the Villain's new move at the practice session! @david_willey #whistlepodu 🦁💛 pic.twitter.com/OVZQwPiQUz
— Chennai Super Kings (@ChennaiIPL) May 16, 2018

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 2 இந்திய 'ஸ்டார்' வீரர்களுக்கு ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்.. பிசிசிஐ முடிவு!
சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்