
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில், ஆஸ்திரேலியாவுக்கு டஃப் கொடுத்த இந்தியாவின் கே.எல்.ராகுல் 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பு 57-வது இடத்தில் இருந்த கேல்.எல்.ராகுல், அந்தத் தொடரில் முறையே 64, 10, 90, 51, 67, 60, 51 என்ற வரிசையில் ஓட்டங்களைக் குவித்தார்.
57-வது இடத்தில் இருந்து ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் படிப்படியாக முன்னேற்றம் கண்டு தற்போது அவரின் விடாமுயற்சியால் 11-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.
வழக்கம்போல ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார்.
நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இரு இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய அதிகபட்ச தரவரிசையாகும்.
இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் புஜாரா நான்காவது இடத்தில் இருக்கிறார்.
கேப்டன் கோலி ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்.
அஜிங்க்ய ரஹானே மூன்று இடங்கள் முன்னேற்றம் கண்டு 14-ஆவது இடத்தில் இருக்கிறார். முரளி விஜய் நான்கு இடங்களை இழந்து 34-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.