
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுத் தந்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ஆந்திர அரசு வழங்கிய சப் – கலெக்டர் பதவியை அவர் நேற்று முறைப்படி ஏற்றுக் கொண்டார்.
பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்று தந்து அசத்தினார். இதனால் பல்வேறு மாநிலங்கள் அவருக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கெளரவித்தன.
தெலங்கானா அரசு 5 கோடியும், ஆந்திர அரசு 3 கோடியும் வழங்குவதாக அறிவித்தன. மேலும், சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு குரூப் 1 பிரிவு அதிகாரி பொறுப்பான துணை ஆட்சியர் பதவி வழங்கி கெளரவித்தது.
இந்நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆந்திர மாநிலம் கொல்லபுடியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று துணை கலெக்டராக பொறுப்பேற்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.வி.சிந்து, இந்த பதவியை ஏற்றுக்கொண்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பி.வி.சிந்து கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.