Temple Device: பி.வி. சிந்து தலையில் 'அந்த' சின்ன டிவைஸ் என்ன? Zomato நிறுவனருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

Published : Aug 18, 2026, 11:59 AM IST
Temple Device

சுருக்கம்

Temple Device: 2026 BWF உலக சாம்பியன்ஷிப்பில் பி.வி. சிந்து அணிந்திருந்த 'Temple' டிவைஸ் கவனம் ஈர்த்துள்ளது. இந்த டிவைஸ் எதற்காக பயன்படுகிறது? இதற்கும் Zomato தீபிந்தர் கோயல் டீமுக்கும் என்ன தொடர்பு? என பார்க்கலாம்.

இந்தியாவின் ஸ்டார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, 2026 BWF உலக சாம்பியன்ஷிப் போட்டியை ஒரு வெற்றியுடன் தொடங்கியுள்ளார். ஆனால், இந்த மேட்ச்சில் சிந்துவின் ஆட்டத்தை விட, அவர் தலையின் ஓரத்தில் அணிந்திருந்த ஒரு சின்ன டிவைஸ் தான் எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கண்ணுக்குப் பக்கத்தில் ஒரு ஸ்டிக்கர் போல ஒட்டப்பட்டிருந்த இந்த சாதனம், சாதாரண ஹெட்பேண்ட் இல்லை. இது 'Temple' என அழைக்கப்படும் ஒரு அதிநவீன டெக்னாலஜி. இதை Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் தலைமையிலான ஒரு டீம் உருவாக்கி வருகிறது.

பி.வி. சிந்து தலையில் இருந்த அந்த சின்ன டிவைஸ் என்ன?

உயர்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் போட்டியின்போது, அவர்களின் உடல் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரிக்கத்தான் இந்த 'Temple' டிவைஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையின் பக்கவாட்டில் எளிதாகப் பொருந்தக்கூடிய இந்த சின்ன டிவைஸை, சிந்து ஏற்கெனவே தனது பயிற்சியின்போது சோதனை செய்து வருகிறார். இப்போது முதல்முறையாக ஒரு நிஜ போட்டியிலேயே இதைப் பயன்படுத்தியிருப்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Tallest Cricketers: 6 அடிக்கு மேல.. இந்தியாவின் உயரமான கிரிக்கெட் வீரர்கள்.. லிஸ்ட் பார்த்தா அசந்துடுவீங்க!

'Temple' என்ன செய்யும்?

ரிப்போர்ட்களின்படி, இந்த 'Temple' டிவைஸ் ஒரு வீரரின் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் உட்பட, பல நரம்பியல் மற்றும் உடலியல் தகவல்களை சேகரிக்கும். ஒரு விளையாட்டு வீரரின் உடலும் மூளையும் மன அழுத்தத்திற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது? கடுமையான போட்டி நேரத்தில் உடல் மற்றும் அறிவாற்றல் திறனில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? போன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ள இந்த டேட்டா உதவும். அதாவது, இது வெறும் இதயத் துடிப்பை அளக்கும் சாதாரண ஃபிட்னஸ் பேண்ட் மாதிரி இல்லை. ஒரு வீரரின் மூளை மற்றும் உடல் செயல்பாடுகளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் முயற்சி இது.

தீபிந்தர் கோயல் டீம் உருவாக்கம்

Zomato-வின் இணை நிறுவனர் தீபிந்தர் கோயல் தலைமையிலான டீம்தான் இந்த 'Temple' டிவைஸை உருவாக்கி வருகிறது. விளையாட்டு மற்றும் ஹெல்த் டெக்னாலஜி துறையில் இது ஒரு புதிய சோதனையாகப் பார்க்கப்படுகிறது. பி.வி. சிந்து போன்ற முன்னணி வீரர்களிடம் இருந்து இந்த டிவைஸ் குறித்த கருத்துகளையும், சோதனை முடிவுகளையும் பெற்று வருகிறார்கள். சிந்துவின் கணவர் வெங்கட தத்தா சாயும் இந்த சோதனையில் ஈடுபட்டதாகவும், ஆரம்பகட்ட முடிவுகள் சிறப்பாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டியின்போது ஏன் அணிந்திருந்தார்?

பயிற்சியின்போது ஒரு டிவைஸை டெஸ்ட் செய்தால், அது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இருந்து கிடைக்கும் டேட்டாவாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு நிஜமான போட்டியில் வீரர்களின் உடலும் மூளையும் முற்றிலும் சுயமாக செயல்படும். அதனால், சிந்து இதை போட்டியின்போது அணிந்திருப்பது, உண்மையான போட்டி சூழலில் இந்த டிவைஸ் எப்படி செயல்படுகிறது, என்ன மாதிரியான டேட்டாவை சேகரிக்கிறது என்பதை சோதித்துப் பார்ப்பதற்காக இருக்கலாம்.

இன்னும் விற்பனைக்கு வரவில்லை

தற்போதைக்கு இந்த 'Temple' டிவைஸ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சந்தையில் கிடைக்காது. இது இன்னும் சோதனை மற்றும் மேம்பாட்டு கட்டத்தில் இருக்கும் ஒரு சாதனம். தீபிந்தர் கோயலின் திட்டப்படி, எதிர்காலத்தில் இதை ஒரு வெல்னஸ் புராடக்ட்டாக அறிமுகப்படுத்த இலக்கு வைத்துள்ளனர். இந்த டிவைஸின் அறிவியல் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆய்வு முடிவுகளின் ஆதரவைப் பெறும் முயற்சிகளும் நடப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: IND vs SL: கபில் தேவ்வுடன் எலைட் லிஸ்ட்டில் இணைந்த 'சர்' ஜடேஜா! டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை!

விலை எவ்வளவு இருக்கலாம்?

ஒருவேளை இந்த 'Temple' டிவைஸ் சந்தைக்கு வந்தால், அதன் விலை சுமார் $1,000 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சம் வரை இருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது தற்போதைய ஒரு கணிப்பு மட்டுமே. இதன் அதிகாரப்பூர்வ விலை மற்றும் வெளியீட்டு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

விளையாட்டுத் தொழில்நுட்பத்தில் புதிய சோதனை

பி.வி. சிந்துவின் தலையில் இருந்த அந்த சின்ன டிவைஸ், இப்போது வெறும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டிய ஒரு டெக் கேட்ஜெட்டாக மட்டும் இல்லை. விளையாட்டு வீரர்களின் செயல்திறன், மன அழுத்தம், உடல்-மூளை தொடர்பு ஆகியவற்றை டேட்டா அடிப்படையில் புரிந்துகொள்ளும் ஒரு புதிய முயற்சியாக இது கவனம் ஈர்த்துள்ளது. வரும் காலங்களில் 'Temple' அறிவியல் சோதனைகளை வெற்றிகரமாக முடித்து சந்தைக்கு வந்தால், ஸ்போர்ட்ஸ் மற்றும் வெல்னஸ் டெக்னாலஜி துறையில் இது ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Tallest Cricketers: 6 அடிக்கு மேல.. இந்தியாவின் உயரமான கிரிக்கெட் வீரர்கள்.. லிஸ்ட் பார்த்தா அசந்துடுவீங்க!
IND vs SL: கபில் தேவ்வுடன் எலைட் லிஸ்ட்டில் இணைந்த 'சர்' ஜடேஜா! டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை!