IND vs SL: கபில் தேவ்வுடன் எலைட் லிஸ்ட்டில் இணைந்த 'சர்' ஜடேஜா! டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை!

Published : Aug 17, 2026, 09:31 PM IST
Ravindra Jadeja

சுருக்கம்

IND vs SL Test: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 350 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஆல்ரவுண்டராக கபில் தேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இலங்கையின் காலேவில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இன்றைய 3ம் நாள் ஆட்டத்தில், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 350-வது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்த சாதனையை படைத்த 5-வது இந்திய பந்துவீச்சாளர் ஜடேஜா. இவருக்கு முன்னால் அனில் கும்ப்ளே (619), ரவிச்சந்திரன் அஷ்வின் (537), கபில் தேவ் (434), ஹர்பஜன் சிங் (417) ஆகியோர் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.

ரவீந்திர ஜடேஜா சாதனை

ரவீந்திர ஜடேஜா இடது கை ஸ்பின்னர்களில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இலங்கையின் ரங்கனா ஹெராத் (433) மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி (362) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இலங்கை வீரர் கேஷர நுவந்தா, ஜடேஜாவின் பந்தை தூக்கி அடிக்க முயன்றார். ஆனால், பந்து சரியாக பேட்டில் படாததால், ஷுப்மன் கில் கேட்ச் பிடித்தார். இதுதான் ஜடேஜாவின் 350-வது விக்கெட்.

கபில்தேவ் சாதனையுடன் சமன்

இந்த மைல்கல் மூலம், ஜடேஜா மற்றொரு பெரிய சாதனையையும் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000 ரன்களுக்கு மேல் அடித்து, 350 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை முன்னாள் கேப்டன் கபில் தேவுடன் பகிர்ந்து கொள்கிறார். இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு, ஜடேஜா 89 டெஸ்ட்களில் 4,095 ரன்களும், 348 விக்கெட்டுகளும் எடுத்திருந்தார்.

இதையும் படிங்க: AUS vs Ban 1st Test: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை அலற விட்ட வங்கதேசம்.. வரலாற்று சாதனை வெற்றி!

3 விக்கெட்டுகளை சாய்த்த ஜடேஜா

உலக அளவில் பார்த்தால், 4,000 ரன்கள் மற்றும் 350 விக்கெட்டுகள் என்ற சாதனையை எட்டிய 4-வது வீரர் ஜடேஜா. கபில் தேவ், இங்கிலாந்தின் இயன் போத்தம், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோர் இந்த பட்டியலில் உள்ள மற்ற வீரர்கள். கபில் தேவ் தனது டெஸ்ட் கரியரில் 5,248 ரன்களும் 434 விக்கெட்டுகளும் எடுத்தார். போத்தம் 5,200 ரன்களும் 383 விக்கெட்டுகளும், வெட்டோரி 4,531 ரன்களும் 362 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா பேட்டிங்கில் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட் சாய்த்துள்ளார்.

இதையும் படிங்க: WTC Points Table: ஆஸ்திரேலியா படுதோல்வியால் இந்தியாவுக்கு சாதகமா? டேட்டா என்ன சொல்கிறது?

முதல் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் தேவ்தத் படிக்கல்லின் 167 ரன்கள் உதவியுடன் 462 ரன்கள் குவித்தது. பின்பு தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் சோனல் தினுஷா (100) சதம் அடித்தார். டிக்வெல்லா 80 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் மானவ் சுதார் 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இலங்கை அணி இந்தியாவை விட 178 ரன்கள் பின்தங்கியுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) 4வது நாள் ஆட்டம் நடக்க உள்ள நிலையில், மழை குறுக்கிடாமல் இருந்தால் இந்த டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Galle Test: 462 ரன்கள் குவித்த இந்தியா... சரசரவென சரிந்த இலங்கை டாப் ஆர்டர்..!
Yashasvi Jaiswal: வைபவ் வந்ததும் ஜெய்ஸ்வாலை கழட்டிவிடும் RR..? MI உடன் மெகா டிரேட் டீல்..?