
புனே ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சாகேத் மைனேனிக்கு "வைல்ட் கார்டு' வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவர் நேரடியாக பிரதான சுற்றில் கலந்து கொள்கிறார்.
புனே ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சாகேத் மைனேனிக்கு "வைல்ட் கார்டு' வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவர் நேரடியாக பிரதான சுற்றில் கலந்து கொள்கிறார். அவரோடு, ஸ்ரீராம் பாலாஜி, ஆர்யன் கோவேஸ், அர்ஜூன் காதே ஆகியோருக்கும் வைல்டு கார்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வியட்நாம் ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் சாகேத் மைனேனி. தற்போது காயம் காரணமாக 2017 சீசனின் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளாததால் தரவரிசையில் 912-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
தரவரிசையில் 140-வது இடத்தில் இருக்கும் யூகி பாம்ப்ரி, 148-வது இடத்தில் இருக்கும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் இந்தியாவின் சார்பில் இப்போட்டியில் கலந்து கொள்ளும் முக்கிய வீரர்கள் ஆவர். கடந்த சீசனில் "ரன்னர்-அப்'ஆக வந்த பிரஜனேஷ் கன்னேஸ்வரனும் நேரடியாக பிரதானச் சுற்றில் கலந்து கொள்கிறார்.
இதனிடையே, சர்வதேச தரவரிசையில் 98-வது இடத்தில் இருக்கும் ஸ்லோவேனியாவின் பிளாஸ் காவ்சிச், 86-வது இடத்தில் இருக்கும் மால்டோவாவின் ராடு அல்போட் ஆகியோரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.