வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்!! சச்சினின் ஆசி பெற்ற வீரருக்கு வாய்ப்பில்லை.. இதுதான் இந்திய அணி

By karthikeyan VFirst Published Oct 2, 2018, 3:45 PM IST
Highlights

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் ஆடும் உத்தேச அணியை பார்ப்போம். 
 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆட உள்ளது. 

இதில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், முரளி விஜய், கருண் நாயர் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களுக்கு பதிலாக பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் ஆடும் உத்தேச அணியை பார்ப்போம். 

மூன்றாம் வரிசையில் புஜாரா, நான்காம் வரிசையில் கோலி, ஐந்தாம் வரிசையில் ரஹானே, ஆறாம் வரிசையில் ஹனுமா விஹாரி, ஏழாம் வரிசையில் வரிசையில் ரிஷப் பண்ட், 8 மற்றும் 9வது வரிசையில் ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் களமிறக்கப்படுவர். தொடக்க வீரர்களை பொறுத்தமட்டில் ராகுல் உறுதி. மற்றொரு வீரராக அகர்வாலா அல்லது பிரித்வி ஷாவா என்று பார்த்தால், அகர்வால் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகளே உள்ளன. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான பயிற்சி போட்டியில் சோபிக்க பிரித்வி ஷா தவறிவிட்டார். அதேநேரத்தில் செம ஃபார்மில் இருக்கும் மயன்க் அகர்வால், 90 ரன்களை குவித்தார். அகர்வால் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகளே உள்ளன. அதனால் சச்சினின் ஆசிபெற்ற பிரித்வி ஷா வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ஆட வாய்ப்பில்லை. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உத்தேச இந்திய அணி:

கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ்
 

click me!