
புரோ கபடி ‘லீக்’ போட்டிகள்….தமிழ் தலைவாஸ் அணி வீரர்களை அறிமுகப்படுத்தினார் கமலஹாசன்….
கடந்த 2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கின் 5-ஆவது சீசனில் முதல் முறையாக கூடுதலாக நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 12 அணிகள் இந்த சீசனில் விளையாடுகின்றன.
மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
இப்போட்டிகள் 28-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. அக்டோபர் 28-ந்தேதி வரை இந்தப்போட்டிகள் ஐதராபாத், நாக்பூர், அகமதாபாத், லக்னோ, மும்பை, கொல்கத்தா, சோனிபட், ராஞ்சி, டெல்லி, சென்னை, ஜெய்ப்பூர், புனே உட்பட 12 நகரங்களில் நடைபெறவுள்ளது
தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பரத் தூதராக நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். கோட்டை தாண்டி புகழை சூடுங்கள் என தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா இன்று பிற்பகலில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சியை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், அல்லு அர்ஜுன் மற்றும் அல்லு அர்விந்த் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.