புரோ கபடி: விறுவிறுப்பான ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது மும்பை அணி…

Asianet News Tamil  
Published : Sep 23, 2017, 11:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
புரோ கபடி: விறுவிறுப்பான ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது மும்பை அணி…

சுருக்கம்

Pro Kabaddi The Mumbai team beat the Delhi team

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 89-வது ஆட்டத்தில் யு-மும்பா அணி 30-28 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றிக் கண்டது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 89-வது ஆட்டம் யு-மும்பா மற்றும் தபாங் டெல்லி அணிகள் இடையே டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் அபாரமாக ஆடிய தபாங் டெல்லி அணி 8-வது நிமிடத்தில் யு-மும்பா அணியை ஆல் ஔட்டாக்கி 11-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பிறகு இரண்டே நிமிடங்களில் 4 புள்ளிகளைப் பெற்ற யு-மும்பா அணி, 7-12 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. 15-வது நிமிடத்தில் யு-மும்பா ரைடர் காஷிலிங் அடாகே, இரு புள்ளிகளைக் கைப்பற்ற, 10-13 என்ற நிலையில் பின்தங்கியிருந்தது யு-மும்பா. அதற்குப் பதிலடியாக டெல்லி வீரர் ரோஹித் இரு புள்ளிகளைப் பெற்றுத்தர, அந்த அணி 15-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பிறகு 18-வது நிமிடத்தில் டெல்லி அணியை ஆல் ஔட்டாக்கிய யு-மும்பா அணி, சரிவிலிருந்தும் மீண்டது. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 16-16 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் இரு அணிகளும் 20-20 என்ற சமநிலையில் இருந்தன. தொடர்ந்து இரு அணிகளும் அபாரமாக ஆட 35-வது நிமிடம் வரை 25-25 என்ற சமநிலை நீடித்தது. 

இறுதியில் யு-மும்பா வீரர் ஸ்ரீகாந்த் ஜாதவ் தனது ரைடின் மூலம் ஒரு புள்ளியைக் கைப்பற்ற, அந்த அணியின் காஷிலிங் அடாகே தனது டேக்கிள் மூலம் ஒரு புள்ளியைப் பெற்றுத்தந்தார். இதனால் யு-மும்பா அணி 30-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக் கண்டது.

யு-மும்பா 8-வது வெற்றியைப் பெற்று 44 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் மும்பை அணி தக்கவைத்துக் கொண்டது.

ஆனால், 8-வது தோல்வியை சந்தித்துள்ளது டெல்லி அணி 29 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Harbhajan Singh House: 7 கோடி ரூபாய் பங்களா! பிரம்மாண்ட தியேட்டர், கிரிக்கெட் ரூம்...ஹர்பஜன் சிங்கின் சொகுசு அரண்மனை இதோ!
ரூ.100 கொடுத்தால் தான் செல்ஃபி.. சிறுவர்களிடம் கண்டிஷன் போட்ட வைபவ் சூர்யவன்ஷி: கடைசியில் ட்விஸ்ட்!