புரோ கபடி: யு.பி.யோதாவை தோற்கடித்து வெளியேற்றியது புனேரி பால்டன்…

First Published Oct 24, 2017, 9:15 AM IST
Highlights
Pro Kabaddi The defeat of Ubayoda by Pooneri Baldan ...


புரோ கபடி லீக் போட்டியின் பிளே ஆஃப் சுற்றில் புனேரி பால்டான் அணி 40-38 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியை வெற்றிக் கொண்டது.

புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதன் முதல் "வெளியேற்றும்' (எலிமினேஷன்) ஆட்டத்தில் யு.பி.யோதா - புனேரி பால்டான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தின் தொடக்கம் யு.பி.யோதாவுக்கு அருமையானதாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் நிதின் தோமர், நிஷாங்க் ஆகியோர் அற்புதமாக ரைடு செல்ல, 3 நிமிடங்களின் யு.பி.யோதா 5-0 என முன்னிலைப் பெற்றது.

ஆனால், 3-வது நிமிடத்திலேயே புனே வீரர் அக்ஷய் ஜாதவ் தனது ரைடின் மூலம் அணியின் ஸ்கோரை தொடங்கினார். 4-வது நிமிடத்தில் சூப்பர் டேக்கிள் செய்த புனே அணி 3-5 என்ற நிலையை எட்டியது.

இந்நிலையில் புனேவை அதிரடியாக ஆல் ஔட் செய்த யு.பி.யோதா அணி 10-3 என முன்னிலை பெற்றது. அப்போது புனே வீரர் ரிஷங்க் 3 புள்ளிகளை பெற்றுத் தர அந்த அணி 6-10 என நெருங்கியது. எனினும், 7-வது நிமிடத்தில் யு.பி.யோதா ரைடுகள் மூலம் 13-6 என முன்னேற, விடாப்பிடியாக சூப்பர் டேக்கிள் மூலம் புள்ளிகளை வென்று 9-14 என்ற நிலையை எட்டியது புனே.

ஆட்டத்தின் 15-ஆவது நிமிடத்தில் புனே வீரர் தீபக் ஹூடா 2 ரைடு புள்ளிகளை வென்று வர, 13-15 என்ற புள்ளிகள் கணக்கில் இருந்தது அந்த அணி. 17-வது நிமிடத்தில் யு.பி.யோதாவை ஆல் ஔட் செய்து முதல் முறையாக முன்னிலை பெற்றது புனே.

எனினும், யு.பி.யோதா கேப்டன் நிதின் தோமர் தனது ரைடின் மூலம் ஆட்டத்தை சமன் செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 18-18 என சமனிலையில் இருந்தன.

பின்னர் தொடங்கிய 2-வது பாதியின் முதல் நிமிடத்தில் இரு அணிகளுமே தலா ஒரு புள்ளிகள் பெற ஆட்டம் 19-19 என்ற நிலையை எட்டியது. 24-வது நிமிடத்தில் யு.பி.யோதா அணியை மீண்டும் ஆல் ஔட் செய்த புனே 27-19 என முன்னிலைப் பெற்றது. 26-வது நிமிடத்தில் புனே வீரர் தீபக் ஹூடாவும், 28-வது நிமிடத்தில் யு.பி.யோதா வீரர் ரிஷங்கும் "சூப்பர் 10' பெற்றனர்.

அப்போது புனே 30-21 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. பின்னர் மீண்டு வந்த யு.பி.யோதா அணி, 33-34 என புனேவை பின்தொடர்ந்தது. ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் புனே தனது முன்னிலையை 36-33 என அதிகரித்துக் கொண்டது.

இறுதியில் ஒரு டேக்கிள் புள்ளி மூலம் 40-38 என வெற்றி பெற்றது புனே.

tags
click me!