அடுத்த வருடம் முதல் முக்கியமான போட்டிகளில் மட்டுமே பங்கேற்பேன் – ஸ்ரீகாந்த் திட்டம்…

First Published Oct 24, 2017, 9:02 AM IST
Highlights
I will only participate in important tournaments next year - Srikanth project ...


2018-ஆம் ஆண்டில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவதை தவிர்த்து, முக்கியமான போட்டிகளில் மட்டும் பங்கேற்று, அதில் சிறப்பாகச் செயல்பட விரும்புகிறேன் என்று இந்திய பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

டென்மார்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்ற சர்வதேச ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் தென் கொரியாவின் லீ ஹியூனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்.

வெற்றிக்கு பிறகு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீகாந்த் கூறியது:

“2018-ஆம் ஆண்டில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவதை தவிர்த்து, முக்கியமான போட்டிகளில் மட்டும் பங்கேற்று, அதில் சிறப்பாகச் செயல்பட விரும்புகிறேன்.

ஏனெனில், தரவரிசையில் முன்னேறுவதற்கான நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

அடுத்த ஆண்டில் காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி, உலக சாம்பியன்ஷிப், செய்யது மோடி ஆகியவற்றுடன் சேர்த்து மொத்தமாக 15 முதல் 17 போட்டிகளில் விளையாட உள்ளேன்.

டென்மார்க் ஓபன் போட்டியில் சிறப்பாக விளையாடி, முக்கியமான வீரர்களை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரே ஆண்டில் மூன்று பட்டங்களை வெல்வது குறித்து கனவிலும் நினைக்கவில்லை.

தொடர்ந்து இதேபோன்று சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்” என்று அவர் தெரிவித்தார்.

tags
click me!