புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை பங்கமாக வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ் அணி

 
Published : Sep 01, 2017, 09:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை பங்கமாக வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ் அணி

சுருக்கம்

Pro Kabaddi Telugu Titans team has been beaten by the Telugu Titans team

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 54-வது ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 33-28 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை பங்கமாக வீழ்த்தியது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 54-வது ஆட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் அபாரமாக ஆடிய தமிழ் தலைவாஸ் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பிறகு 7-வது நிமிடத்தில் ஸ்கோரை 5-5 என்ற கணக்கில் சமன் செய்த தெலுங்கு டைட்டன்ஸ் அணி, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 12-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி, 33-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.

தெலுங்கு டைட்டன்ஸ் தரப்பில் சோம்பிர் 10 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார்.

தமிழ் தலைவாஸ் தரப்பில் அதன் கேப்டன் அஜய் தாக்குர் 7 புள்ளிகளைக் கைப்பற்றினார். 

இதில் வெற்றிப் பெற்றதன்மூலம் 3-வது வெற்றியைப் பெற்றுள்ள தெலுங்கு டைட்டன்ஸ் அணி, அடுத்த சுற்று வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.

இதுவரை எட்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 5-வது தோல்வி.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!