புரோ கபடி: ஜெய்ப்பூர் அணியை பங்கமாக தோற்கடித்தது புனே அணி…

Asianet News Tamil  
Published : Oct 20, 2017, 09:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
புரோ கபடி: ஜெய்ப்பூர் அணியை பங்கமாக தோற்கடித்தது புனே அணி…

சுருக்கம்

Pro Kabaddi Pune team defeat in Jaipur team

புரோ கபடி லீக் போட்டியில் 130-வது ஆட்டத்தில் புனேரி பால்டான் அணி 38-15 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை பங்கமாக தோற்கடித்தது.

புரோ கபடி லீக் போட்டியில் 130-வது ஆட்டத்தில் புனேரி பால்டான் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.

இதில், தொடக்கம் முதலே புனே அணிதான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதன்படி புனே அணி 15 ரைடு புள்ளிகள், 18 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் ஔட் புள்ளிகள், ஒரு கூடுதல் புள்ளி பெற்றது.

ஆனால், ஜெய்ப்பூர் அணி 8 ரைடு புள்ளிகள், 7 டேக்கிள் புள்ளிகளை மட்டுமே எடுத்தது.

புனே அணியின் ரைடர் தீபக் ஹூடா அதிகபட்சமாக 22 ரைடுகளில் 11 புள்ளிகள் பெற்றார். 
தடுப்பாட்டக்காரர் அக்ஷய் ஜாதவ் 4 டேக்கிள் புள்ளிகளை வென்று அசத்தினார்.

ஜெய்ப்பூர் தரப்பில் பவன் குமார் 3 ரைடு புள்ளிகளும், கேப்டன் மஞ்ஜித் சில்லார் 3 டேக்கிள் புள்ளிகளும் பெற்றனர்.

இறுதியில் புனேரி பால்டான் அணி 38-15 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை பங்கமாக தோற்கடித்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

இந்தியா vs ஆஸ்திரேலியா: டி20 உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும் பேட்டிங் லைன்
IND vs NZ: ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கில், ஐயர் மீண்டும் சேர்ப்பு